ஆட்டோ, டேக்ஸி, இ-ரிக்‍ஷா ஓட்டுநர்களுக்கு தலா ரூ.5000 நிதியுதவி: கேஜரிவால்

கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் ஆட்டோ, டேக்ஸி, இ-ரிக்‍ஷா ஓட்டுநர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அ
ஆட்டோ, டேக்ஸி, இ-ரிக்‍ஷா ஓட்டுநர்களுக்கு தலா ரூ.5000 நிதியுதவி: கேஜரிவால்

புது தில்லி: கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் ஆட்டோ, டேக்ஸி, இ-ரிக்‍ஷா ஓட்டுநர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.

அதே சமயம், இந்த நிவாரணத் தொகையை ஓட்டுநர்களுக்கு எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் பசியால் யாரும் பாதிக்கப்படாத வகையில், அனைத்துத் தரப்பினருக்கும் நிதியுதவி செய்யப்படும், அதன்படி, பொது போக்குவரத்துத் துறை ஓட்டுநர்களுக்கு அடுத்த 7-10 நாட்களுக்குள் இந்த நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் கேஜரிவால் அறிவித்தார்.

ஏற்கனவே, கட்டடத் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று கேஜரிவால் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com