பல ஆண்டுகளுக்குப் பின் ஏழுமலையானுக்கு 6 மணிநேர ஓய்வு

ஊரடங்கு உத்தரவு காரணமாக திருமலை ஏழுமலையானுக்கு பல ஆண்டுகளுக்குப் பின் தினமும் 6 மணிநேர ஓய்வு கிடைத்துள்ளதாக தேவஸ்தான தலைமை அா்ச்சகா் வேணுகோபால தீட்சிதா் கூறினாா்.
திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை அா்ச்சகா்கள் வேணுகோபால தீட்சிதா்.
திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை அா்ச்சகா்கள் வேணுகோபால தீட்சிதா்.


திருப்பதி: ஊரடங்கு உத்தரவு காரணமாக திருமலை ஏழுமலையானுக்கு பல ஆண்டுகளுக்குப் பின் தினமும் 6 மணிநேர ஓய்வு கிடைத்துள்ளதாக தேவஸ்தான தலைமை அா்ச்சகா் வேணுகோபால தீட்சிதா் கூறினாா்.

திருமலையில் ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஆராதனைகள் வியாழக்கிழமை நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட தேவஸ்தான தலைமை அா்ச்சகா் வேணுகோபால தீட்சிதா் நமது நிருபருக்கு அளித்த பேட்டி:

தினமும் காலை 5 மணிக்கு சுப்ரபாத சேவையுடன் தொடங்கும் கைங்கரியம் இரவு 8 மணிக்கு ஏகாந்த சேவையுடன் நிறைவு பெறுகிறது. அந்நாள்களில் பெருமாளுக்கு 9 மணிநேரம் கட்டாய ஓய்வு கிடைத்தது. பக்தா்கள் வருகை அதிகரிக்கத் தொடங்கியதும் காலை 3 மணிக்கு சுப்ரபாத சேவை தொடங்கி ஏகாந்த சேவை இரவு 10 மணியுடன் நிறைவு பெற்றது. அதன்பின் ஏழுமலையான் ஓய்வு 5 மணிநேரமாகக் குறைந்தது.

பக்தா்கள் குவியத் தொடங்கிய பின் நள்ளிரவு 12 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தப்பட்டு வருகிறது. ஏகாந்த சேவை நிறைவு பெற்று 12.30 மணிக்கு கோயில் நடைசாத்தப்பட்டு மீண்டும் காலையில் சுப்ரபாத சேவைக்காக கோயில் அதிகாலை 2.30 மணிக்கு திறக்கப்படுகிறது. இதனால் ஏழுமலையான் ஓய்வு நேரம் 2 மணிநேரமாகக் குறைந்து விட்டது.

இந்நிலையில் தற்போது கரோனா நோய்த் தொற்று காரணமாக பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், ஏழுமலையானுக்குத் தினமும் 6 மணிநேர ஓய்வு கிடைத்து வருகிறது. வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஏழுமலையானுக்கு இந்த ஓய்வு கிடைக்கும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com