ஹரியாணாவில் கரோனா தொற்றுக்கு முதல் பலி

ஹரியாணாவில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 66 வயது முதியவர் இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஹரியாணாவில் கரோனா தொற்றுக்கு முதல் பலி


ஹரியாணாவில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 66 வயது முதியவர் இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 66 வயது முதியவர் ஆபத்தான நிலையில் சண்டீகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

இதற்கு முன்னதாக தனது சொந்த ஊரான அம்பாலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. அவர் மரணத்திற்குப் பிறகு தான் அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஹரியாணாவில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை புதன்கிழமை வரை 29 ஆக உள்ளது. 244 பேரின் இரத்த மாதிரிகள் சோதனைக்காகக் காத்திருக்கின்றனர். மேலும், 546 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com