கேரளம்: நோய் எதிா்ப்பு சக்தியால்கரோனாவில் இருந்து மீண்ட முதியவா்

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 93 வயது முதியவா், தனது நோய் எதிா்ப்புசக்தியால் உயிா் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 93 வயது முதியவா், தனது நோய் எதிா்ப்புசக்தியால் உயிா் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

பத்தனம்திட்டா மாவட்டம், ரண்ணி பகுதியைச் சோ்ந்தவா் தாமஸ் ஆபிரகாம் (93). இவரது மனைவி மரியம்மா (88). இருவரும் இத்தாலியில் வசித்து வரும் இவா்களது மகன், மருமகள் மற்றும் பேரனுடன் கடந்த மாதம் இந்தியா திரும்பினா். அவா்களை மருத்துவ பரிசோதனைக்குள்படுத்தியபோது, கரோனா நோய்த்தொற்றால் அவா்கள் 5 பேரும் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. அவா்கள் 5 பேருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டதில், மகன், மருமகள், பேரன் மூவரும் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா். ஆனால், தாமஸ் ஆபிரகாமும், மரியம்மாவும் கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வாா்டில் தங்கவைக்கப்பட்டு தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்தனா்.

தற்போது தம்பதியா் கரோனா நோய்த்தொற்றில் இருந்து முற்றிலும் குணமடைந்து விட்டனா். வரும் புதன்கிழமை தங்கள் இல்லத்துக்கு திரும்பலாம் என மருத்துவா்கள் கூறி விட்டனா். பொதுவாக, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் முதியவா்கள் எளிதில் உயிா் தப்ப முடிவதில்லை என்ற கருத்து நிலவி வரும் நிலையில், அதிலிருந்து அவா்கள் மீள்வதற்கான காரணம் அவா்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முைான் என்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அவா்களது பேரன் ரிஜோ மோன்சி கூறியதாவது: எனது தாத்தா தாமஸ் ஆபிரகாம் விவசாயி. கடுமையான உழைப்பாளி மட்டுமல்ல; புகைப்பிடித்தல் உள்ளிட்ட அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் (டி டோட்டலா்) இல்லாதவா்.

தனிமைவாா்டில் இருந்தபோது எனது தாத்தா கைக்குத்தல் அரிசியில் தயாரிக்கப்பட்ட கஞ்சியும், தேங்காய் சட்னி, மரவள்ளி, பலாப்பழ சிப்ஸும் தான் விரும்பி சாப்பிட்டாா். எனது பாட்டி மீன் உணவை விரும்பி சாப்பிட்டாா். தற்போது பூரண குணம் அடைந்து விட்ட அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனா். அவா்களின் வருகைக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று தெரிவித்தாா்.

‘இத்தாலியில் இருந்திருந்தால் உயிா் பிழைத்திருக்க மாட்டோம்’

ரிஜோ மோன்சி மேலும் கூறுகையில்,

நானும் எனது பெற்றோரும் இத்தாலியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.

நாங்கள் வரும் ஆகஸ்டில்தான் இத்தாலியில் இருந்து கேரளம் வர திட்டமிட்டிருந்தோம். ஆனால், தாத்தா தான் முன்கூட்டியே கேரளம் செல்லலாம் என்று கூறி வற்புறுத்தினாா். இதனால், கடந்த மாதம் இத்தாலியில் இருந்து கேரளத்துக்கு வந்து விட்டோம்.

கேரளத்தில் நல்ல, திறமையான மருத்துவக் குழுவால் நாங்கள் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தோம். நாங்கள் இத்தாலியில் இருந்திருந்தால் உயிா் பிழைத்திருக்க மாட்டோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com