ரயில்களில் டிக்கெட் முன்பதிவு நிறுத்தம் செய்யப்படவில்லை: ரயில்வே நிர்வாகம் விளக்கம்

ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பின்னர் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு ஒருபோதும் நிறுத்தம் செய்யப்படவில்லை என ரயில்வே நிர்வாகம் விளக்கம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பின்னர் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு ஒருபோதும் நிறுத்தம் செய்யப்படவில்லை என ரயில்வே நிர்வாகம் விளக்கம் தெரிவித்துள்ளது.

கரோனா எதிரொலியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஏப்ரல் 15 ஆம் தேதியிலிருந்து ரயில்களில் பயணிப்பதற்கான முன்பதிவு டிக்கெட் இன்று(வியாழக்கிழமை) தொடங்கியுள்ளது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதையடுத்து ரயில்வே நிர்வாகம் இதுகுறித்து விளக்கம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 15 ஆம் தேதிக்குப் பின்னர் ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு டிக்கெட் ஒருபோதும் நிறுத்தம் செய்யப்படவில்லை என்றும் வழக்கம்போல ஏப்ரல் 15ம் தேதியிலிருந்து பயணம் செய்ய முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது. 

முன்னதாக, ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் தங்களது டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டிய தேவையில்லை. தானாகவே அவை ரத்தாகி விடும். மேலும், டிக்கெட் கட்டணம் முழுவதுமாக அவர்களது வங்கிக்கணக்கில் திருப்பிச் செலுத்தப்படும். நேரடியாக கவுண்டரில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட்டை ரத்து செய்ய ஜூன் 21 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என ரயில்வே அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com