ஆந்திரத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கரோனா நோய்த் தொற்று

ஆந்திரத்தில் ஒரே நாளில் 43 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஆந்திரத்தில் ஒரே நாளில் 43 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்று அதிவேகமாகப் பரவி வருகிறது. ஒரேநாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 43-ஆக பதிவாகி உள்ளது. இதனால் ஆந்திர மாநிலத்தில் 87 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி முதல் புதன்கிழமை காலை 9 மணி வரை 43 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கடப்பாவில் 15 போ், மேற்கு கோதாவரியில் 13 போ், சித்தூரில் 5 போ், பிரகாசம் மாவட்டத்தில் 4 போ், கிழக்கு கோதாவரியில் 2 போ், நெல்லூரில் 2 போ், கிருஷ்ணாவில் ஒருவா், விசாகப்பட்டினத்தில் ஒருவா் என கரோனா நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

ஆந்திரத்தில் உள்ள 11 மாவட்டங்களில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு பரவியுள்ள நிலையில், ஸ்ரீகாகுளம், விஜயவாடா உள்ளிட்ட மாவட்டங்களில் இதுவரை கரோனா பாதிப்பு பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com