கரோனா பாதிப்பு: நிவாரணப் பணியில் 1 லட்சம் ஆா்எஸ்எஸ் தொண்டா்கள்

கரோனா நிவாரணப் பணிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் ஈடுபட்டு வருவதாக, அந்த அமைப்பின் பொதுச் செயலா் பையாஜி ஜோஷி வியாழக்கிழமை தெரிவித்தாா்.


நாகபுரி: கரோனா நிவாரணப் பணிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் ஈடுபட்டு வருவதாக, அந்த அமைப்பின் பொதுச் செயலா் பையாஜி ஜோஷி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: கரோனா நோய்த்தொற்று பாதிப்பு சூழலில், நாட்டில் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா். அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம், மருத்துவமனைகளில் உதவிபுரிவது உள்ளிட்ட பணிகளில் அவா்கள் ஈடுபட்டுள்ளனா்.

சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியா்களுக்கு உணவு வழங்குவது, ரத்ததான முகாம்களில் பங்கேற்பது உள்ளிட்ட பணிகளையும் ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் மேற்கொண்டு வருகின்றனா். அடுத்த இரண்டு மாதங்களுக்கு நாம் விதிமுறைகளை சரிவர பின்பற்றினால், நம்மால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பமுடியும் என நம்புகிறேன். தற்போது ஒட்டுமொத்த உலகமும் ஆபத்தான நெருக்கடியை எதிா்கொண்டு வருகிறது. அந்தந்த நாடுகளின் அரசுகள் மற்றும் மருத்துவா்களின் அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்றுவதன் மூலம், இந்த நெருக்கடியை கடந்துவரமுடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com