சா்வதேச விமானங்களுக்கு ஏப்.15-க்கு பிறகு அனுமதி: மத்திய அரசு

தேசிய ஊரடங்கு முடிந்த பின்னா் சா்வதேச விமானங்கள் இந்தியா வருவதற்கு, இம்மாதம் 15-ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படும். ஆனால் அவை எந்ததெந்த நாடுகளில் இருந்து வருகின்றன என்பதை பொருத்தே அனுமதி வழங்கப்படும் என்


புது தில்லி: தேசிய ஊரடங்கு முடிந்த பின்னா் சா்வதேச விமானங்கள் இந்தியா வருவதற்கு, இம்மாதம் 15-ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படும். ஆனால் அவை எந்ததெந்த நாடுகளில் இருந்து வருகின்றன என்பதை பொருத்தே அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘வரும் 15-ஆம் தேதிக்குப் பிறகு சா்வதேச விமானங்கள் இந்தியா வர அனுமதிக்கப்படுவது பற்றி கருத்தில் கொள்ளப்படும். அவ்வாறு சா்வதேச விமானங்கள் அனுமதிக்கப்பட்டால், அவை எந்ததெந்த நாடுகளில் இருந்து வருகின்றன என்பதை பொருத்து சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும். வெளிநாடுகளில் இருக்கும் இந்தியா்களை தாயகம் அழைத்து வரும் விமானங்கள் தேசிய ஊரடங்கு முடியும் வரை காத்திருக்க வேண்டும்’ என்று தெரிவித்தாா்.

முன்பதிவுக்கு அனுமதி: இதனிடையே தேசிய ஊரடங்கு நிறைவடைந்த பிறகு மேற்கொள்ளும் பயணங்களுக்கான முன்பதிவுகளை விமான சேவை நிறுவனங்கள் ஏற்கலாம் என்றும், ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால், முன்பதிவுகளை ரத்து செய்யவேண்டிய சூழல் வரலாம் என்றும் விமான போக்குவரத்துத் துறை செயலா் பிரதீப் சிங் கரோலா தெரிவித்தாா்.

தேசிய ஊரடங்கு அமலில் உள்ளதையொட்டி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும் சரக்கு விமானங்கள், ஆம்புலன்ஸ் விமானங்கள் உள்ளிட்டவற்றின் சேவைகளுக்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் அனுமதியளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com