கரோனா தொற்று பெரும் பீதியால் ஒரு மாதத்தில் பலத்த அடி வாங்கிய முதல் தரப் பங்குகள்!

உலக அளவில் கரோனா தொற்று பெரும் பீதியால் தொழில் துறை நெருக்கடியைச் சந்தித்துள்ள நிலையில், நிதி சந்தைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கரோனா தொற்று பெரும் பீதியால் ஒரு மாதத்தில் பலத்த அடி வாங்கிய முதல் தரப் பங்குகள்!


உலக அளவில் கரோனா தொற்று பெரும் பீதியால் தொழில் துறை நெருக்கடியைச் சந்தித்துள்ள நிலையில், நிதி சந்தைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முதலீட்டாளர் பெரும் அளவில் முதலீடுகளை மேற்கொண்டு வரும் பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. அதில் இந்திய பங்குச் சந்தைகளும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் பலத்த அடி வாங்கியுள்ளன.

பங்குச் சந்தையில்  பார்மா நிறுவனப் பங்குகளும், எஃப்எம்சிஜி என்று சொல்லப்படும்  விரைவாக விற்பனையாகும் நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனப் பங்குகளின் குறியீடு பெரிய அளவில் பாதிப்பை சந்திக்கவில்லை. ஆனால், மற்ற துறை நிறுவனப் பங்குகளும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. குறிப்பாக 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் குறியீடு , 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய   நிஃப்டி குறியீடு ஆகியவை உள்பட அனைத்துத் துறை குறியீடுகளும் கடந்த ஒரு மாதத்தில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. பேங்க் நிஃப்டி 33.19 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

மேலும், ரியால்ட்டி குறியீடு அதிகபட்சமாக  37.50 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. பிஎஸ்யு பேங்க், மெட்டல், மீடியா, ஃபைனான்சியல் சர்வீஸஸ், ஆட்டோ ஆகியவற்றின் முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய குறியீடுகள் 30 முதல் 36 சதவீதம் வரை சரிவைச் சந்தித்துள்ளன. இந்நிலையில், முதலீட்டுக்கு உகந்ததாக முதல் தரப் பங்குகள் மீது அனைவருக்கும் மோகம் இருந்து வரும் நிலையில், கரோனா தாக்கத்தில் அந்தப் பங்குகளும் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி50 பட்டியலில்  இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், ரிலையன்ஸ், மாருதி, டாடா மோட்டார்ஸ், எல் அண்ட் டி ஓஎன்ஜிசி,  ஐடிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா ஸ்டீல், எச்டிஎஃப்சி,  எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், இண்டஸ் இந்த்  பேங்க் உள்பட 50 முன்னணி நிறுவனப் பங்குகள் உள்ளன. இதில் ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்கு மட்டுமே கடந்த ஒரு மாதத்தில் சிறிதளவு (0.17 சதவீதம்) ஆதாயம் பெற்ற ஒரே பங்காக உள்ளது.  மற்ற நிறுவனப் பங்குகள் அனைத்தும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.

குறிப்பாக வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், ஆட்டோ, ஆயில் நிறுவனப் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. இதில் தனியார் வங்கியான இண்டஸ் இந்த் பேங்க் கடந்த ஒரு மாதத்தில் 67.89 சதவீதம் சரிவைச் சந்தித்து பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. ஆயில் நிறுவனங்களான கெயில், ஓஎன்ஜிசி, பிபிசிஎல், ஐஓசி  ஆகியவை 25 முதல் 30 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளன. முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பி வாங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 20 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.  

அதேபோன்று, எம் அண்ட் எம், மாருதி சுஸýகி, ஹீரோ மோட்டார் கார்ப், டாடா மோட் டார்ஸ், ஐஷர், பஜாஜ் ஆட்டோ ஆகிய ஆட்டோ நிறுவனப் பங்குகள் 20 முதல் 50 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளன. 

ஜீ டெலி, இன்ஃப்ரா டெல், பவர் கிரிட், எல் அண்ட் டி, எச்டிஎஃப்சி, சிமெண்ட், டைட்டான், பஜாஜ் ஃபைனான்ஸியல் சர்வீஸஸ், வேதாந்தா, ஜேஎஸ்டபிள்யு, பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் 30 முதல் 50 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளன.

நிஃப்டி பட்டியலில் உள்ள வங்கிப் பங்குகளான  எச்டிஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க் ஆகியவையும் 25 முதல் 50 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளன. ஏற்கெனவே கரோனா அச்சுறுத்தலால் இந்திய பங்குச் சந்தைகள் அடி மேல் அடி வாங்கி வரும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தர நிர்ணய நிறுவனமான மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை நிறுவனம், இந்திய வங்கிகள் மீதான கண்ணோட்டத்தை நிலையானதிலிருந்து எதிர்மறையாக மாற்றி அறிவிப்பை வெளியிட்டது. 

அதன் தாக்கம் பங்குச் சந்தையில் கடுமையாக எதிரொலித்தது. இதனால் வங்கிப் பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், ஐடிசி, டாக்டர் ரெட்டி, ஏசியன் பெயிண்ட்ஸ்,  நெஸ்ட்லே, பிரிட்டானியா ஆகியவை கடந்த ஒரு மாதத்தில் 3 முதல் 16 சதவீதம் வரைதான் சரிவைக் கண்டுள்ளன. 

இந்தப் பங்குகள் பெரும்பாலானவை முதலீட்டாளர்கள் விரும்பி வாங்கப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை முடிவில் மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 27,590.95 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 8,083.80 புள்ளிகளிலும் நிலைபெற்றுள்ளது. 

இந்நிலையில், பங்குச் சந்தை தொடர்ந்து 7 -ஆவது வாரமாக வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு மாதத்தில் 40-50 சதவீதம் வீழ்ச்சி கண்ட பங்குகள் (சதவீதத்தில்)
யுபிஎல்                                         -------  40.24
ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல்       ----------- 41.78
எம் அண்ட் எம்                   ------------  42.65
ஹிண்டால்கோ               -------------  42.93
வேதாந்தா                     ----------------  47.51
பஜாஜ் ஃபைனான்ஸ் ---------------- 48.27
பஜாஜ் ஃபின்சர்வ்            ------------  48.84
டாடா மோட்டாஸ்         -------------- 46.16

சரிவைச் சந்தித்த முன்னணி பங்குகள் (சதவீதத்தில்)
விப்ரோ                                --------- 17.19
டிசிஎஸ்                               --------   17.97
இன்ஃபோஸிஸ்                 -------- 20.55
ரிலையன்ஸ்                     --------- 19.35
ஹீரோ மோட்டோகார்ப் ------ 19.87
ஐஷர்                                 ----------- 24.65
அல்ட்ரா டெக்                 --------    24.74
ஐஓசி                                   ---------  25.94
பிபிசிஎல்                        ---------    27.65
எச்டிஎஃப்சி                  ---------     28.22
ஸ்ரீசிமெண்ட்                     ----     28.84 
ஓஎன்ஜிசி                       --------    29.15
டாடா ஸ்டீல்                     -----    29.38
இன்ஃப்ரா டெல்                  ---- 29.83
கிராஸிம்                         ------    30.94
டெக் மஹிந்திரா              ----- 33.72
மாருதி சுஸுகி                  ---- 33.49
ஜீ டெலி                                 ---- 51.98

அடி வாங்கிய வங்கிப் பங்குகள் (சதவீதத்தில்)
எச்டிஎஃப்சி
27.78
ஐசிஐசிஐ
28.79
எஸ்பிஐ
34.61
ஆக்ஸிஸ்
47.43
இண்டஸ் இந்த்
67.89

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com