இந்தியாவில் 4,067 பேருக்கு கரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,067 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 4,067 பேருக்கு கரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,067 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,067 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இன்று தெரிவித்துள்ளது.

மேலும் கரோனாவுக்கு இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 292 ஆனது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 690 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு-571, தில்லி- 503, கேரளா-314 ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களில் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com