தனிமையில் வைக்கப்பட்டுள்ள செவிலியருக்கும் மகளுக்குமான பாசப் போராட்டம்

அம்மா இங்கே வா என கன்னடத்தில் அழைக்கும் மகள் கண் எதிரே நின்றாலும், அவளை கட்டி அணைத்து முத்தமிட முடியாத நிலையில் நின்றார் அவரது தாய் சுகந்தா. 
தனிமையில் வைக்கப்பட்டுள்ள செவிலியருக்கும் மகளுக்குமான பாசப் போராட்டம்

பெலகாவி: அம்மா இங்கே வா என கன்னடத்தில் அழைக்கும் மகள் கண் எதிரே நின்றாலும், அவளை கட்டி அணைத்து முத்தமிட முடியாத நிலையில் நின்றார் அவரது தாய் சுகந்தா. 

தனது கண்ணீரை துடைத்தபடி, கண்ணீரோடு நிற்கும் தனது மகளை பார்த்து போய் வா என்று கையசைக்கிறார். தாய் ஏன் வரவில்லை என்று தெரியாமல், அழுதபடியே தந்தையோடு பயணிக்கிறார் 3 வயது மகள்.

பெலகாவியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள செவிலியரான சுகந்தாவுக்கும் அவரது மகளுக்கும் இடையே நடந்த இந்தப் பாசப் போராட்டத்தை அங்கிருந்த பலரும் கண் கலங்கியபடியே பார்த்துச் சென்றனர்.

இந்த விடியோ சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகிறது. இந்த விடியோவைப் பார்த்த கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும், செவிலியர் சுகந்தியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரது தைரியத்தையும், தன்னலம்கருதா பணியையும் பாராட்டியுள்ளார்.

பெலகாவி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார் சுகந்தா. இவர் தற்போது இரண்டு வார காலத்துக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த இரண்டு வாரத்தில் அவரது குடும்பத்தினரை அவர் சந்திக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வார காலம் முடிந்த நிலையில், சுகந்தாவின் 3 வயது மகள் ஐஸ்வர்யா, தாயைப் பார்க்க வேண்டும் என்று தொடர்ந்து அழுததால், தூரத்தில் இருந்து பார்க்க அனுமதிக்கப்பட்டார்.

அப்போது நடந்தது தான் இந்த பாசப்போராட்டம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com