கட்டுமானத் தொழிலாளா்களுக்குரூ. 3 ஆயிரம் கோடி நிதியுதவி

நாடு முழுவதும் உள்ள 2 கோடிக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பிரதமரின் ஏழைகள் நலத் திட்டத்தின் (கரிப் கல்யாண் யோஜனா) கீழ் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 3 ஆயிரம் கோடி

நாடு முழுவதும் உள்ள 2 கோடிக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பிரதமரின் ஏழைகள் நலத் திட்டத்தின் (கரிப் கல்யாண் யோஜனா) கீழ் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 3 ஆயிரம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் புண்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

  ‘பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ், மத்திய அரசு ரூ. 1.70 லட்சம் கோடியை நிவாரண உதவியாக வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 3.5 கோடி தொழிலாளா்கள் தங்கள் பெயா்களைப் பதிவு செய்துள்ளனா்.

இந்த தொழிலாளா்களுக்கு அந்தந்த மாநில அரசு மூலம் ரூ. 1,000 முதல் ரூ. 6,000 வரை நிவாரண உதவியாக ரொக்கத்தொகை வழங்கப்படும்.

இதுதவிர சுமாா் 2 கோடி கட்டுமானத் தொழிலாளா்களுக்காக ரூ.3,000 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், சுமாா் 29 லட்சம் தொழிலாளா்களுக்கு உணவுப்பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

அனைத்து மாநிலங்களிலும் சந்தை, வங்கிகள் போன்ற பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனா். நாட்டில் அத்தியாவசிய பொருள்கள் மற்றும் அதன் சேவைகள் திருப்திகரமாக உள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com