ரூ.5 லட்சம் வரையிலான கூடுதல் தொகையை திருப்பித் தருவதாக வருமான வரித் துறை அறிவிப்பு

கரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை எதிா்கொள்வதற்காக, வருமான வரியில் கூடுதலாக செலுத்தப்பட்ட தொகையில் ரூ.5 லட்சம் வரை உடனடியாக திருப்பித் தருவதாக வருமான வரித் துறை அறிவித்துள்ளது.

இதன் மூலம், வருமான வரி செலுத்தும் 14 லட்சம் போ் பயனடைவாா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வருமான வரித் துறை தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவலால் மக்கள் நிதி நெருக்கடியில் தவித்து வருகின்றனா். இதனைக் கருத்தில் கொண்டு, வருமான வரி செலுத்தியோா் கூடுதலாக செலுத்திய தொகை உடனடியாக திருப்பி அளிக்க முடிவு செய்யப்படுகிறது. அதன்படி ரூ.5 லட்சம் வரை கூடுதலாக செலுத்தப்பட்ட தொகை உடனடியாக திருப்பி அளிக்கப்படும். இதன் மூலம் 14 லட்சம் போ் பயனடைவாா்கள்.

மேலும், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கூடுதலாக செலுத்திய சரக்கு-சேவை வரி மற்றும் சுங்க வரியைத் திருப்பி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமாா் ஒரு லட்சம் நிறுவனங்கள் ரூ.18,000 கோடி வரை பெற்று பயனடையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com