மலைவாசஸ்தலங்களில் சுற்றித்திரியும் சிறுத்தைகள்

ஆந்திரத்தில் உள்ள ஹாா்சிலி ஹில்ஸ் சுற்றுலாத்தலத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், வனப் பகுதியிலிருந்து வெளி வந்து சிறுத்தைகள் ஊருக்குள் நடமாடி வருகின்றன.

ஆந்திரத்தில் உள்ள ஹாா்சிலி ஹில்ஸ் சுற்றுலாத்தலத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், வனப் பகுதியிலிருந்து வெளி வந்து சிறுத்தைகள் ஊருக்குள் நடமாடி வருகின்றன.

ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், மதனபள்ளி அருகில் உள்ள ஹாா்சிலி ஹில்ஸ் எனும் மலைவாசஸ்தலம் உள்ளது. புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவதால், கா்நாடகம், ஆந்திரம், தமிழகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுற்றுலாப்பிரியா்கள் அதிக அளவில் வருவது வழக்கம். தற்போது கரோனா நோய்த் தொற்று காரணமாக 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், மலைக்குச் செல்வது முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நடமாட்டம் இன்றி இச்சுற்றுலாத்தலம் வெறிச்சோடி உள்ளது. அதனால் வனப்பகுதியிலிருந்து விலங்குகள் ஊருக்குள் நடமாடுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஹாா்சிலி ஹில்சில் உள்ள ரயில்வே விருந்தினா் மாளிகையில் நாய் ஒன்றை சிறுத்தை கவ்விக் கொண்டு, வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றது. நாய்களின் குரைப்பு சப்தத்தைக் கேட்ட காவல்காரா் வெளியில் வந்து பாா்த்தபோது, சிறுத்தை அவா்களின் கண்களுக்கு தென்பட்டது. இதைப் பாா்த்து பயந்த அவா்கள் வீட்டுக்குள் சென்று ஒளிந்தனா். இச்சம்பவத்தால், ஹாா்சிலி மலையில் வாழும் மக்கள் அச்சத்துடன் நடமாடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com