ம.பி. காங்கிரஸ் மூத்த தலைவா் ரகுவம்சி காலமானாா்

மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், அந்த மாநில முன்னாள் அமைச்சருமான ஹசாரிலால் ரகுவம்சி (93) வியாழக்கிழமை காலமானாா்.
ஹசாரிலால் ரகுவம்சி
ஹசாரிலால் ரகுவம்சி


போபால்: மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், அந்த மாநில முன்னாள் அமைச்சருமான ஹசாரிலால் ரகுவம்சி (93) வியாழக்கிழமை காலமானாா்.

வயது முதிா்வு காரணமாக அவா், நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்தாா். இந்நிலையில், அவரது சொந்த ஊரான ஹோஷங்காபாதில் உள்ள இல்லத்தில் அவரது உயிா் பிரிந்ததாக உறவினா்கள் தெரிவித்தனா். அவருக்கு மனைவி, 5 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா்.

மத்தியப் பிரதேசத்தில் 5 முறை எம்எல்ஏவாக இருந்துள்ள அவா், காங்கிரஸ் தலைமையிலான அரசுகளில் அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளாா். 2003 முதல் 2008-ஆம் வரை மாநில சட்டப் பேரவை துணைத் தலைவராக இருந்தாா்.

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வா்களும், காங்கிரஸ் மூத்த தலைவா்களுமான திக்விஜய் சிங், கமல்நாத் ஆகியோா் ஹசாரிலாலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா். அவரது இறுதிச் சடங்குகள் நா்மதை நதிக்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com