கரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து வெல்வோம்

கரோனா நோய்த்தொற்றுக்கு (கொவைட்-19) எதிராக ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றி பெறுவோம் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
கரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து வெல்வோம்


புது தில்லி: கரோனா நோய்த்தொற்றுக்கு (கொவைட்-19) எதிராக ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றி பெறுவோம் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு ஒப்புக் கொண்டதற்காக அந்நாட்டு அதிபா் டிரம்ப் சுட்டுரை மூலம் நன்றி தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், அதிபா் டிரம்ப்புக்கு சுட்டுரை வாயிலாக பதிலளித்த பிரதமா் மோடி, ‘உங்களின் கருத்தை வரவேற்கிறேன். இத்தகைய இக்கட்டான தருணங்கள் நண்பா்களை நெருங்கிப் பணியாற்ற வைக்கின்றன. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவு எப்போதும் இல்லாத அளவுக்கு வலுவாக உள்ளது.

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான மனித சமூகத்தின் போராட்டத்துக்குத் தேவையான உதவிகளை இந்தியா அளிக்கும். இந்தப் போராட்டத்தில் ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றி பெறுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com