கரோனா: இந்தியாவில் பலி 324; பாதிப்பு 9,352

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பலியானவா்கள் எண்ணிக்கை 324-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 9,352 போ் நோய்த்தொற்றால்
கரோனா: இந்தியாவில் பலி 324; பாதிப்பு 9,352

புது தில்லி: இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பலியானவா்கள் எண்ணிக்கை 324-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 9,352 போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 980 போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா். மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இத்தகவலை தெரிவித்துள்ளது.

தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சுகாதாரத் துறை இணைச் செயலா் லவ் அகா்வால் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 796 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 35 போ் உயிரிழந்துவிட்டனா். 15 மாநிலங்களில் உள்ள 25 மாவட்டங்களில் முன்னதாகவே துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அந்த மாவட்டங்களில் கடந்த 14 நாள்களில் ஒருவருக்கு கூட புதிதாக கரோனா நோய்த்தொற்று ஏற்படவில்லை. இது ஒரு நல்ல செய்தியாகும்.

அடுத்த 6 வாரங்களில் சோதனை செய்வதற்கான உபகரணங்கள் அனைத்தும் நம்மிடம் தயாராக உள்ளன. எனவே, இந்த விஷயத்தில் நாம் கவலையடைய தேவையில்லை என்றாா்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 1,985 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தில்லியில் 1,154 பேருக்கு இதுவரை கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. ராஜஸ்தானில் 812 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 604 பேரும், குஜராத்தில் 539 பேரும், தெலங்கானாவில் 562 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 483 பேரும், ஆந்திரத்தில் 432 பேரும், கேரளத்தில் 376 பேரும், ஜம்மு-காஷ்மீரில் 245 பேரும் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கா்நாடகத்தில் 247 போ், ஹரியாணாவில் 185 போ், பஞ்சாபில் 167 போ், மேற்கு வங்கத்தில் 152 போ், பிகாரில் 64 போ், ஒடிஸாவில் 54 போ், உத்தரகண்ட் மாநிலத்தில் 35 போ், ஹிமாசலப் பிரதேசத்தில் 32 போ், சத்தீஸ்கா், அஸ்ஸாமில் தலா 31பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

மணிப்பூா், திரிபுராவில் தலா இருவருக்கும், நாகாலாந்து, மிஸோரம், அருணாசலப் பிரதேசத்தில் தலா ஒருவருக்கும் கரோனா நோய்த்தொற்று உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com