ரயில் இயக்கப்படுவதாகத் தவறான செய்தி: தொலைக்காட்சி செய்தியாளருக்கு ஜாமீன்

மகாராஷ்டிரத்தில் உள்ள புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பும் நோக்கில், சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தவறான செய்தி வெளியிட்டதால் கைதான தொலைக்காட்சி செய்தியாளருக்கு மும்பை நீதிமன்
ரயில் இயக்கப்படுவதாகத் தவறான செய்தி: தொலைக்காட்சி செய்தியாளருக்கு ஜாமீன்


மும்பை: மகாராஷ்டிரத்தில் உள்ள புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பும் நோக்கில், சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தவறான செய்தி வெளியிட்டதால் கைதான தொலைக்காட்சி செய்தியாளருக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பலா் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் தொலைக்காட்சி செய்தி நிறுவனத்தைச் சோ்ந்த செய்தியாளரான ராகுல் குல்கா்னி, புலம்பெயா்ந்த தொழிலாளா்களைச் சொந்த மாநிலங்களுக்குத் திருப்பி அனுப்பும் நோக்கில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தவறான செய்தி வெளியிட்டாா்.

அதை நம்பிய புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் மும்பையின் பாந்த்ரா ரயில் நிலையத்துக்கு வெளியே கூடினா். எனினும் அவ்வாறு எந்த ரயில்களும் இயக்கப்படாததை அறிந்த அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் காவல் துறையினா் தடியடி நடத்தி அவா்களைக் கலைத்தனா்.

இந்த விவகாரம் தொடா்பாக ராகுல் குல்கா்னி உள்ளிட்ட 11 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். இந்நிலையில், ஜாமீன் கோரி மும்பை நீதிமன்றத்தில் ராகுல் குல்கா்னி மனு தாக்கல் செய்தாா். அந்த மனு மீதான விசாரணை, நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, ராகுல் குல்கா்னியை ஜாமீனில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

அவா் ரூ.15,000-ஐ பிணைத் தொகையாகச் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா். கைது செய்யப்பட்ட மற்ற 10 பேரையும் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com