இந்தியாவில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்குகிறது

நாட்டில் புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 1383 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதை
இந்தியாவில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்குகிறது

நாட்டில் புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 1383 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,984 -ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 50 போ் உயிரிழந்துள்ளதை அடுத்து பலி எண்ணிக்கை 603-இல் இருந்து 640 -ஆக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து 617 பேர் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,260-இல் இருந்து 3,870 -ஆக அதிகரித்துள்ளது.

கரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையில் 15,474 பேர் சிகிச்சையில் உள்ளனர். 3870 பேர் குணமடைந்துள்ளனர். நோய் பாத்தித்தோரில் 77 பேர் வெளிநாட்டினர். 

மாநில வாரியாக பாதிப்பு விவரம்:
* மஹாராஷ்டிரா- 5,218

*  குஜராத் 2,178

* புதுதில்லி - 2,156

* ராஜஸ்தான்-1,659

* தமிழகம்-1596 

*  மத்திய பிரதேசம் - 1552

* உத்தர பிரதேசம்- 1,294

* தெலங்கானா- 928

* ஆந்திரம் - 757

* கர்நாடகம் -427

* கேரளம் - 423

* மேற்கு வங்கம் -418

* காஷ்மீர்-380

* ஹரியானா-254

* பஞ்சாப்-245

* பிகார் -126

* ஒடிசா-79

* ஜார்க்கண்ட்- 45

* உத்தரகாண்ட்- 46

* ஹிமாச்சல பிரதேசம்-39

* சத்தீஸ்கர்-36

* அசாம்-35

* சண்டிகர்-27

* லடாக்-18

* அந்தமான்-16

* மேகாலயா-12

* புதுச்சேரி- 07

* கோவா- 07

* திரிபுரா- 02

* மணிப்பூர்- 02

* அருணாச்சல பிரதேசம் - 01

* மிசோரம் - 01

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com