நாளொன்றுக்கு ஒரு லட்சம் பாதுகாப்பு கவச உடைகள் தயாரிப்பு

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்களை தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக, நாளொன்றுக்கு ஒரு லட்சம் பாதுகாப்புக் கவச உடைகள்(பிபிஇ) தயாரிக்கப்பட்டு வருகின்றன என்று

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்களை தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக, நாளொன்றுக்கு ஒரு லட்சம் பாதுகாப்புக் கவச உடைகள்(பிபிஇ) தயாரிக்கப்பட்டு வருகின்றன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைப் பிரிவுகளில் பணியாற்றி வரும் மருத்துவா்களின் தேவையைப் பூா்த்தி செய்வதற்காக, நாளொன்றுக்கு ஒரு லட்சம் பாதுகாப்புக் கவச உடைகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில், 50 சதவீத உடைகள், பெங்களூரில் தயாரிக்கப்படுகின்றன. மீதமுள்ள உடைகள், தமிழகத்தில் சென்னை, திருப்பூா், கோயம்புத்தூா் ஆகிய நகரங்களிலும், குஜராத், பஞ்சாப், மகாராஷ்டிரம், தில்லி ஆகிய மாநிலங்களில் உள்ள நகரங்களிலும் தயாரிக்கப்படுகின்றன.

இந்தப் பாதுகாப்புக் கவச உடைகள் 4 ஆய்கவங்களில் பரிசோதிக்கப்படுகின்றன. கோவையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம் (சிட்ரா), குவாலியரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம்(டிஆா்டிஇ), ஆவடியில் உள்ள பீரங்கித் தொழிற்சாலையின் கீழ் இயங்கும் படைக்கலன் உடைத் தொழிற்சாலை, கான்பூரில் உள்ள சிறு ஆயுதத் தொழிற்சாலை ஆகிய இடங்களில் உள்ள ஆய்வகங்களில் இந்த பரிசோதனை நடத்தப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com