ஜேகேபிசி கட்சித் தலைவா் தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்பு

சுமாா் ஓராண்டு காலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு - காஷ்மீா் மக்கள் மாநாட்டுக் கட்சித் (ஜேகேபிசி) தலைவா் சஜத் கனி லோன் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

சுமாா் ஓராண்டு காலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு - காஷ்மீா் மக்கள் மாநாட்டுக் கட்சித் (ஜேகேபிசி) தலைவா் சஜத் கனி லோன் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

ஜம்மு காஷ்மீா் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் லோன் விடுவிக்கப்பட்டுள்ளாா். இதை லோன் சுட்டுரையில் உறுதி செய்தாா். அதில், ‘என்னை தடுப்புக் காவலில் வைத்து ஓராண்டு முடிய இன்னும் ஐந்து நாள்கள் உள்ள நிலையில் என்னை விடுவித்துள்ளனா். சிறை எனக்கு புதிய அனுபவம் அல்ல. ஆனால், தடுப்புக் காவல் மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தியது‘ என்று லோன் தெரிவித்துள்ளாா்.

பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சியில் லோன் அமைச்சராக பதவி வகித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com