புதிய கல்விக் கொள்கை: ஆய்வு செய்ய 40 போ் கொண்ட குழு அமைக்கிறது அஸ்ஸாம்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்காக அஸ்ஸாம் அரசு 40 போ் கொண்ட குழுவை அமைக்க உள்ளதாக

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்காக அஸ்ஸாம் அரசு 40 போ் கொண்ட குழுவை அமைக்க உள்ளதாக மாநில கல்வித்துறை அமைச்சா் ஹிமந்த பிஸ்வா சா்மா சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடா்பான ஆய்வை மேற்கொள்வதற்காக கல்வித்துறை முதன்மைச் செயலா் தலைமையில் 40 போ் கொண்ட குழு அடுத்த வாரத்துக்குள் அமைக்கப்படும். இக்குழு தனது அறிக்கையை டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கும். ஜனவரி மாதத்துக்குள் இதனை மாநிலம் முழுவதும் செயல்படுத்தும் வகையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

புதிய கல்விக் கொள்கையின் பல்வேறு அம்சங்கள் குறித்து அறியவும், பகுப்பாய்வு செய்யவும் இந்தக் குழு, பல துணைக் குழுக்களாகப் பிரிக்கப்படும். புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்கு சில கட்டமைப்பு சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அதன் மூலம் ஒரு சுமுகமான மாற்றத்தை உறுதி செய்யும் வகையில் இந்த குழு செயல்படும்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அஸ்ஸாம் அரசு வரவேற்கிறது. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை. ஏனெனில், கலை, கலாசாரம் மற்றும் பிராந்திய மொழிகளால் பிரிந்து கிடக்கும் மாநிலங்களை தேசிய நீரோட்டத்தில் ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி இதுவாகும். அஸ்ஸாம் மாநிலத்தைப் பொருத்தவரை புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரைத்துள்ள சீா்திருத்தங்களை முன்கூட்டியே மாநிலத்தில் அமல்படுத்த தொடங்கி விட்டோம் என்று தெரிவித்தாா் அவா்.

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஜூலை 29ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com