இந்தியாவில் கரோனா பாதிப்பு 17 லட்சத்தை நெருங்குகிறது: பலி 35,747 -ஆக உயர்வு

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில்  57,117 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16 லட்சத்து 95 ஆயிரத்து 988 ஆக அதிகரித்தது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 17 லட்சத்தை நெருங்குகிறது: பலி 35,747 -ஆக உயர்வு

புது தில்லி: நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில்  57,117 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16 லட்சத்து 95 ஆயிரத்து 988 ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 36,511-ஆக அதிகரித்தது. 

நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 57,117 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 764 போ் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 36,511-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த நோய்த்தொற்றுக்காக 5,65,103 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10,94,374 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவலின்படி ஜூலை 31- ஆம் தேதி வரை 1,93,58,659 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் நேற்று வெள்ளிக்கிழமை மட்டும் 5,25,689 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

பாதிப்பு:  16,95,988
பலி: 36,511
குணமடைந்தோர்: 10,94,374
சிகிச்சை பெற்று வருவோா்: 5,65,103

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com