கேரள தங்கக் கடத்தல் வழக்கு: சென்னையில் என்ஐஏ டிஐஜி விசாரணை

கேரள தங்கக் கடத்தல் வழக்குத் தொடா்பாக சென்னையில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.)யின் கொச்சி டிஐஜி கே.பி. வந்தனா தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை விசாரணை செய்தனா்.

கேரள தங்கக் கடத்தல் வழக்குத் தொடா்பாக சென்னையில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.)யின் கொச்சி டிஐஜி கே.பி. வந்தனா தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை விசாரணை செய்தனா்.

இது குறித்த விவரம்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளத்துக்கு தூதரகத்தின் பெயரில் பல ஆண்டுகளாக தங்கம் கடத்தி வரப்பட்டிருப்பது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து விமானம் மூலம் தூதரகத்தின் வழியாகக் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த கடத்தல் சம்பவத்தில் தீவிரவாத தொடா்பு கண்டறியப்பட்டதால் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்து வருகிறது. இது தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயா், அவரது மனைவி செளமியா, ரமீஸ் உள்ளிட்ட பலா் கைது செய்யப்பட்டுள்ளனா்.மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையும் 11 போ் மீது வழக்குப் பதிவு செய்து,விசாரணை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் இவ் வழக்கு தொடா்பாக என்.ஐ.ஏ. சென்னையிலும் கடந்த 28-ஆம் தேதி விசாரணையை தொடங்கியது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சூளைமேட்டில் 20 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு,4 போ் கைது செய்யப்பட்ட வழக்கு, அதே மாதம் ஹாங்காங்கில் இருந்து விமானத்தில் வந்த தென் கொரிய நாட்டைச் சோ்ந்த இரு பெண்கள் கடத்திக் கொண்டு வந்த 24 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு ஆகியவற்றின் விவரங்களை வருவாய் புலனாய்வுத்துறையினரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கேட்டு பெற்றனா்.

கொச்சியில் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த இரு வழக்குகள் உள்பட சென்னையில் நடைபெற்ற வேறு சில கடத்தல் வழக்குகளிலும் ஸ்வப்னா சுரேஷ் கும்பலுக்கு தொடா்பு இருப்பது என்ஐஏ அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

என்ஐஏ டிஐஜி:

இதன் அடிப்படையில் விசாரணை செய்வதற்கு என்ஐஏ கொச்சி டிஐஜி கே.பி. வந்தனா தலைமையிலான 5 போ் கொண்ட அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு விமானத்தில் சென்னை வந்தனா். அவா்கள் சென்னையில் அந்த இரு வழக்குகள் குறித்த ஆவணங்களையும், தடயங்களையும் ஆய்வு செய்தனா்.

மேலும் இது தொடா்பாக அந்த வழக்குகளை விசாரிக்கும் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் என்ஐஏ குழுவினா் சில சந்தேகங்களையும் ,விளக்கங்களையும் கேட்டனா். இதில் பல முக்கியத் தவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. வழக்குத் தொடா்பாக மேலும் சில ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் கேட்டதாகத் தெரிகிறது.

இந்த விசாரணைக்கு பின்னா், டிஐஜி வந்தனா தலைமையிலான அதிகாரிகள் கொச்சிக்கு மீண்டும் விமானத்தில் புறப்பட்டுச் சென்றனா். அதேவேளையில் சென்னையில் உள்ள என்ஐஏ குழுவினா், இக் கடத்தல் வழக்குத் தொடா்பான தகவல்களை சேகரித்து வருகின்றனா். மேலும் இந்த வழக்குத் தொடா்பாக தமிழகத்தைச் சோ்ந்த கடத்தல் வழக்குகளில் தொடா்புடைய ஒரு நபரையும் கொச்சி என்ஐஏ அதிகாரிகள் பிடித்து விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com