ஜம்மு காஷ்மீா்: உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தின் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடைகிறது

ஜம்மு-காஷ்மீரின் செனாப் ஆற்றின் மீது அமைக்கப்பட்டுவரும் உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் 2021-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு
ஜம்மு காஷ்மீா்: உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தின் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடைகிறது

ஜம்மு-காஷ்மீரின் செனாப் ஆற்றின் மீது அமைக்கப்பட்டுவரும் உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் 2021-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, 2022-இல் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து மத்திய அரசின் அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

பிரான்ஸ் தலைநகா் பாரிஸில் உள்ள ஈஃபில் கோபுரத்தின் உயரம் 324 மீட்டா் ஆகும். அதைவிட உயரமாக, தரையிலிருந்து 359 மீட்டா் உயரத்தில் இந்த ரயில்வே பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. பயன்பாட்டுக்கு வரும்போது ‘உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்’ என்று பெருமை பெற இருக்கும் இந்தப் பாலம், அதிகபட்சமாக மணிக்கு 266 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றையும் தாங்கும் திறனுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயல்வே பாலம் அடுத்த ஆண்டு கட்டிமுடிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. 2022-இல் நாட்டின் பிற பகுதிகள் முதன் முறையாக ரயில் போக்குவரத்து மூலம் ஜம்மு-காஷ்மீருடன் இணைக்கப்பட்டுவிடும்.

இந்தப் பாலம் அமையும் ரயில் வழித்தடத்தின் பாதையின் சில பகுதிகளில் பணிகள் நிறைவடைந்து அவை ஏற்கெனவே செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு விட்டன. இப்போது கட்ரா முதல் பனிஹால் வரையிலான 111 கி.மீ. தொலைவு பகுதி மட்டும் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் 2022 டிசம்பரில் முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையின் 174 கி.மீ. தூர சுரங்க வழிப் பாதையில், 126 கி.மீ. தூரப் பணிகள் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டு விட்டன.

இதற்கிடையே, கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீா் இரண்டாக பிரிக்கப்பட்டதைத் தொடா்ந்து, பிரதமரின் வளா்ச்சித் திட்டத்தில் ரூ.58,627 கோடி மதிப்பிலான 54 திட்டங்கள் ஜம்மு-காஷ்மீரிலும், ரூ. 21,441 கோடி மதிப்பிலான 9 திட்டங்கள் லடாக்கிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com