இந்த ஆண்டு ராக்கி விற்பனை 75% சரிவு

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் பரவலாக தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கமும், சில பகுதிகளில் கடுமையான பொதுமுடக்கமும் அமலில் இருப்பதால் ரக்க்ஷா பந்தன் பண்டிகை வழக்கமான கொண்டாட்டத்தை இழந்துள்ளத
இந்த ஆண்டு ராக்கி விற்பனை 75% சரிவு
இந்த ஆண்டு ராக்கி விற்பனை 75% சரிவு


ஹைதராபாத்: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் பரவலாக தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கமும், சில பகுதிகளில் கடுமையான பொதுமுடக்கமும் அமலில் இருப்பதால் ரக்க்ஷா பந்தன் பண்டிகை வழக்கமான கொண்டாட்டத்தை இழந்துள்ளது.

பொதுவாக சகோதரிகள் சகோதரர்கள் இல்லங்களுக்குச் சென்று ராக்கிக் கயிறு கட்டுவதுதான் இந்த பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சியே.

ஆனால், இந்த ஆண்டு பொது முடக்கம் காரணமாக பல இடங்களில் பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாலும், கரோனா பரவும் அபாயம் இருப்பதாலும் பெரும்பாலானோர் பயணங்களைத் தவிர்த்துள்ளனர்.

இதுபோன்ற காரணங்களால், இந்த ஆண்டு ராக்கிக் கயிறு விற்பனை 75% அளவுக்கு சரிந்துள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளியூர்களில் தங்கி பணியாற்றும் பெண்கள், சொந்த ஊருக்குச் செல்ல முடியாவிட்டால், தங்கள் பகுதியிலேயே ராக்கிக் கயிறு வாங்கி அதனை சகோதரர்களுக்கு கொரியர்களில் கூட அனுப்பிவந்தனர். ஆனால், கொரியர் பார்சல் மூலம் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கரோனா பரவும் அபாயம் இருப்பதால், இந்த ஆண்டு அதைக் கூட செய்ய அச்சமாக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

பல ஆண்டுகளாக ராக்கிக் கயிறு விற்பனையில் ஈடுபட்டு வரும் வியாபாரிகளோ, இதுபோன்ற ஒரு மோசமான நிலையை நாங்கள் இதுவரைக் கண்டதே இல்லை என்கிறார்கள். சந்தைகளுக்கு வந்து ராக்கிக் கயிறு வாங்குவோரின் எண்ணிக்கை 60% அளவுக்கு சரிந்துவிட்டது. சில்லறை வணிகர்கள் ஏராளமானோர் வந்து ஒட்டுமொத்தமாக ராக்கிக் கயிறு வாங்கிச் செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு ஒருவர் கூட அவ்வாறு வந்து வாங்கிச் செல்லவில்லை என்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ரக்க்ஷா பந்தன் காலத்தில் சுமார் 40 லட்சம் அளவுக்கு வணிகம் ஆகும், இந்த முறை 75% அளவுக்கு சரிவு கண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com