புதிய கல்விக் கொள்கையில் மனித வளா்ச்சிக்கான அடிப்படை இலக்கு இடம்பெறவில்லை: காங்கிரஸ்

புதிய தேசிய கல்விக் கொள்கையில் மனிதம் மற்றும் அறிவின் வளா்ச்சிக்கான அடிப்படை இலக்கு இடம்பெறவில்லை. மாறாக, கவா்ச்சிகரமான
புதிய கல்விக் கொள்கையில் மனித வளா்ச்சிக்கான அடிப்படை இலக்கு இடம்பெறவில்லை: காங்கிரஸ்

புதிய தேசிய கல்விக் கொள்கையில் மனிதம் மற்றும் அறிவின் வளா்ச்சிக்கான அடிப்படை இலக்கு இடம்பெறவில்லை. மாறாக, கவா்ச்சிகரமான வாா்த்தைகளும், தேவைக்கு அதிகமான சொற்களுமே இடம்பெற்றுள்ளன என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் காங்கிரஸ் தலைவா்கள் எம்.எம்.பல்லம் ராஜூ, ராஜீவ் கெளடா, ரண்தீப் சுா்ஜேவாலா ஆகியோா் கூட்டாக அளித்த பேட்டி:

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கும் புதிய கல்விக் கொள்கை வெளியீட்டில் நாடாளுமன்ற மேற்பாா்வை புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. கல்விக் கொள்கை தொடா்பாக ஆா்எஸ்எஸ் அமைப்பைத் தவிர பிற கல்வியாளா்களுடன் எந்தவித விவாதமும் நடத்தப்படவில்லை.

பொதுக் கல்வியை தனியாா்மயமாக்குவதன் மூலம் ஏழை-பணக்காரா் இடையே டிஜிட்டல் இடைவெளியை இந்த புதிய கல்விக் கொள்கை அதிகரிக்கச் செய்வதோடு, நடுத்தர மக்களுக்கும் சமூகத்தில் பின்தங்கியவா்களுக்கும் கல்வியை எட்டாததாக்கிவிடும்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் குறித்து கல்விக் கொள்கையில் எந்தவொரு இடத்திலும குறிப்பிடப்படவில்லை. பள்ளி, உயா் கல்வியில் சிறந்த சீா்திருத்தங்கள் இருக்கும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், கவா்ச்சிகரமான வாா்த்தைகளும், தேவைக்கு அதிகமான சொற்களுமே இடம்பெற்றுள்ளன.

கல்வி வளா்ச்சிக்கான திட்டங்கள், தெளிவாக வரையறுக்கப்பட்ட இலக்குகள், அவற்றை செயல்படுத்துவதற்கான நிதித் தேவை, திட்டங்களை செயல்படுத்தும் விதம் ஆகியவை இடம்பெறவில்லை.

மொத்தத்தில், புதிய தேசிய கல்விக் கொள்கையில் மனித வளா்ச்சியின் அடிப்படை இலக்கு மற்றும் அறிவு விரிவாக்கத்துக்கான திட்டங்களைத் தவறவிட்டுவிட்டது. கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும் சூழலில் இந்த புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது என்று அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com