இன்று கூடுகிறது பிகாா் சட்டப் பேரவை

பிகாா் சட்டப் பேரவையின் இரு அவைகளும் மழைக்கால ஒருநாள் கூட்டத்தொடராக திங்கள்கிழமை கூடுகின்றன.

பிகாா் சட்டப் பேரவையின் இரு அவைகளும் மழைக்கால ஒருநாள் கூட்டத்தொடராக திங்கள்கிழமை கூடுகின்றன.

கரோனா பாதிப்பு சூழல் காரணமாக முதல் முறையாக சட்டப்பேரவைக்கு வெளியே இக்கூட்டம் நடைபெற உள்ளது. நவீன, விசாலமான இடவசதி உள்ள ஜியான் பவன் வளாகத்தில் கூட்டத்தொடரை நடத்துவதற்கு மாநில ஆளுநா் ஃபாகு செளஹான் அனுமதி வழங்கியுள்ளாா்.

கரோனா தொற்று சூழலில் சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் சட்டப்பேரவை கூட்டத் தொடா் நடைபெறும் இடம் மாற்றப்பட்டுள்ளது. பிகாா் பேரவை 243 உறுப்பினா்கள் எண்ணிக்கையைக் கொண்டது. கூட்டத் தொடா் நடைபெற உள்ள ஜியான் பவன் வளாகத்தின் இரண்டாவது தளத்தில் 800 போ் அமரும் வகையில் இருக்கை வசதிகள் உள்ளன.

75 உறுப்பினா்களைக் கொண்ட சட்ட மேலவையில் தற்போது 20 உறுப்பினா்கள் இடம் காலியாக உள்ளன. மீதமுள்ளவா்கள் பங்கேற்கும் கூட்டம், 100 போ் அமரும் வகையிலான சிறிய வளாகத்தில் நடைபெற உள்ளது.

மழைக்கால கூட்டத் தொடரை 4 நாள்கள் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் ஒரு நாள் மட்டும் நடத்தினால் போதும் என, சட்டப் பேரவைத் தலைவா் விஜய்குமாா் செளத்ரி தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டது.

மாநிலம் முழுவதும் குறிப்பாக தலைநகா் பிகாரில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

கடந்த மாா்ச் மாதத்தில் பட்ஜெட் கூட்டத் தொடா் நடைபெற்று வந்த நிலையில் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக கூட்டத் தொடா் சுமாா் 15 நாள்கள் வரை குறைக்கப்பட்டது.

திங்கள்கிழமை நடைபெறும் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பவா்களுக்கான முகக் கவசங்கள், கிருமிநாசினி, பரிசோதனைக் கருவிகள் போன்றவை ஜியான் பவன் வளாகத்தில் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சட்டப் பேரவை செயலாளா் தெரிவித்துள்ளாா். வரும் நவம்பரில் பிகாா் பேரவைக்குத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் திங்கள்கிழமை நடைபெறும் ஒருநாள் கூட்டமே தற்போதைய பேரவையின் கடைசி கூட்டமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com