மும்பையின் போக்குவரத்து சைகை விளக்குகளில் பெண் சின்னம் அறிமுகம்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் போக்குவரத்து சைகை விளக்குகளில் பெண் உருவம் கொண்ட சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெண் உருவம் கொண்ட போக்குவரத்து சைகை விளக்கு
பெண் உருவம் கொண்ட போக்குவரத்து சைகை விளக்கு

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் போக்குவரத்து சைகை விளக்குகளில் பெண் உருவம் கொண்ட சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்கள் பயணம் செய்யும் முறைகளில் சாலைப் போக்குவரத்து முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. பொதுவாக சாலை போக்குவரத்து ஒழுங்குமுறை விளக்குகளில் வாகன ஒழுங்குகளை நடைமுறைபடுத்த சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறங்கள் இடம்பெறும்.

பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது பச்சை வண்ணத்தில் ஆண் உருவம் கொண்ட சின்னம் சாலை விளக்குகளில் ஒளிரவிடப்படும். நாடு முழுவதும் இதே முறை தான் பின்பற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சிவசேனா தலைமையில் உத்தவ்தாக்கரே ஆட்சி செய்துவரும் மகாராஷ்டிரத்தின் மும்பை நகரில் சாலைப் போக்குவரத்து ஒழுங்குவிளக்குகளில் பெண் உருவம் கொண்ட சின்னங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆண் உருவம்கொண்ட  விளக்குகள் பயன்படுத்துவதற்கு பதிலாக பெண் உருவம் கொண்ட  விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. மும்பை மாநகராட்சியின் துணை ஆணையர் கிரண் திகவ்கர் இது குறித்து பேசும் போது, “இது எங்கள் நகரின் பெண் சமத்துவம் மற்றும் வலிமையைப் பிரதிபலிக்கும்.இது ஒரு தொடக்கம் தான்.” எனத் தெரிவித்தார்.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவரும் வேளையில் சமூகத்தில் பெண்களின் இருப்பை உணர்த்துவது அவசியம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் மும்பை மாநகராட்சியின் இந்த நடவடிக்கை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com