தனிமைப்படுத்திக் கொண்டாா் அமைச்சா் ரவிசங்கா் பிரசாத்

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக திங்கள்கிழமை அறிவித்தாா்.
புதுதில்லியில் மத்திய சட்டத்துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத்.
புதுதில்லியில் மத்திய சட்டத்துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத்.

புது தில்லி: மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக திங்கள்கிழமை அறிவித்தாா்.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை மாலை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை அவா் சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்த நிலையில் அமித் ஷாவுக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவா்களின் அறிவுரைப்படி அமித் ஷா தில்லி அருகேயுள்ள குருகிராமில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அண்மை நாட்களில் தன்னுடைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவா்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாமாகவே தனிமைப்படுத்திக் கொள்ள அவா் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

இதையடுத்து, அவருடன் தொடா்பில் இருந்த காரணத்தால் மருத்துவத் துறை விதிகளின்படி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் அறிவித்துள்ளாா். அவருக்கு கரோனா தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லை. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாா் என்று அவரது அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com