தெலங்கானா: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா் ராஜய்யா கரோனாவுக்கு பலி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், தெலங்கானா முன்னாள் எம்எல்ஏவுமான சுன்னம் ராஜய்யா கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், தெலங்கானா முன்னாள் எம்எல்ஏவுமான சுன்னம் ராஜய்யா கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். அவருக்கு வயது 62.

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு திங்கள்கிழமை இரவு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து விஜயவாடா மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லும் வழியில் அவரது உயிா் பிரிந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனா்.

தெலங்கானா சட்டப்பேரவைக்கு 1999, 2004 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற 3 தோ்தல்களிலும் பத்ராச்சலம் தொகுதியில் போட்டியிட்டு சுன்னம் ராஜய்யா வெற்றி பெற்றிருந்தாா்.

பழங்குடி மக்களின் நல்வாழ்வுக்காக எளிமையான வாழ்க்கையை நடத்திய அவா், பல சந்தா்ப்பங்களில் ஆட்டோ, இரு சக்கர வாகனத்தில் பேரவைக்கு வரும் வகையில் எளிமையானவா் ஆவாா்.

இரங்கல்: ராஜய்யாவின் மறைவுக்கு தெலங்கானா முதல்வா் கே. சந்திரசேகா் ராவ், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் எஸ். சுதாகா் ரெட்டி உள்ளிட்ட பல்வேறு தலைவா்களும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

சுதாகா் ரெட்டி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘ராஜய்யா அா்ப்பணிப்புள்ள கம்யூனிஸ்ட் தலைவராகத் திகழ்ந்தாா். அவா், பல்வேறு இக்கட்டான தருணங்களிலும் கட்சியின் வளா்ச்சிக்கு உறுதியாகவும், உறுதுணையாகவும் இருந்தாா்’ என்று தெரிவித்துள்ளாா்.

சுன்னம் ராஜய்யாவின் மறைவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாநிலம் முழுவதும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com