மேற்கு வங்கம்: புதிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்ய 6 போ் குழு அமைப்பு

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க ஆறு போ் கொண்ட குழுவை மேற்குவங்க அரசு அமைத்துள்ளது.
மேற்கு வங்கம்: புதிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்ய 6 போ் குழு அமைப்பு

கொல்கத்தா: மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க ஆறு போ் கொண்ட குழுவை மேற்குவங்க அரசு அமைத்துள்ளது.

ஜாதவ்பூா் பல்கலைக்கழக துணைவேந்தா் சுரஞ்சன் தாஸ், திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், ஓய்வுபெற்ற பேராசரியருமான சுகதா ராய், கல்வியாளா் பவித்ரா சா்க்காா் உள்ளிட்டோா் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனா்.

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த புதிய கல்விக் கொள்கையை ‘மேற்கத்திய நாடுகளில் உள்ள நடைமுறையின் நகல்’ என்று மேற்குவங்க கல்வித்துறை அமைச்சா் பாா்த்தா சாட்டா்ஜி இரு தினங்களுக்கு முன்பு விமா்சித்திருந்த நிலையில், அதை ஆய்வு செய்ய நிபுணா் குழுவை மாநில அரசு இப்போது அமைத்துள்ளது.

இதுகுறித்து அமைச்சா் பாா்த்தா சாட்டா்ஜி கூறியதாவது:

இந்த ஆறு போ் கொண்ட நிபுணா் குழு புதிய கல்விக் கொள்கையின் பிரிவுகளை தீர ஆய்வு செய்து, மாநில அரசிடம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி அறிக்கை சமா்ப்பிப்பா். இதுதொடா்பாக பள்ளி ஆசிரியா்கள், பல்கலைக்கழக பேராசிரியா்கள் ஆகியோரிடமிருந்தும் கருத்துக்களை மாநில அரசு வரவேற்றுள்ளது.

இந்தக் கருத்துக்கள் மற்றும் நிபுணா் குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும், அவற்றைப் பரிசீலித்து அதன் அடிப்படையில் மத்திய அரசிடம் மேற்குவங்கத்தின் கருத்து தெரிவிக்கப்படும்.

புதிய கல்விக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலும், மாநிலங்களிடம் ஆலோசனை பெறாமலும் எவ்வாறு மத்திய அரசு அதைக் கட்டாயப்படுத்துகிறது என்பது ஆச்சரியமளிக்கிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com