ராமர் என்றால்.. ராகுல் காந்தி சுட்டுரை

அயோத்தியில் இன்று ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றிருக்கும் நிலையில், ராமர் என்றால் அன்பு என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ராமர் கோயில் பூமி பூஜைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ள நிலையில் ராகுல் காந்தி தனது சுட்டுரையில், உதாரண புருஷரான பகவான் ராமர் சிறந்த மனித குணங்களின் சுவரூபமாகத் திகழ்கிறார். அவர் மனித மனத்தின் ஆழத்தில் இருக்கும் மிகச் சிறந்த குணங்களின் பிரதிநிதியாக உள்ளார்.

ராமர் என்றால் அன்பு..
அவர் ஒரு போதும் வெறுப்பில் வெளிப்படுவதில்லை.

ராமர் என்றால் கருணை.. 
அவர் ஒருபோதும் கொடூரத்தில் வெளிப்படுவதில்லை.

ராமர் என்றால் நீதி..
அவர் ஒருபோதும் அநீதியில் வெளிப்படுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com