கரோனா சிகிச்சைக்கு திறன்பெற்ற ஃபேபிஃப்ளூவை அறிமுகம் செய்திருக்கும் கிளென்மார்க்

கரோனா சிகிச்சைக்கு அதிக திறன்பெற்ற ஃபேபிஃப்ளூ மருந்தை மும்பையை சேர்ந்த  கிளென்மார்க் மருந்து நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.
கரோனா சிகிச்சைக்கு திறன்பெற்ற ஃபேபிஃப்ளூவை அறிமுகம் செய்திருக்கும் கிளென்மார்க்
கரோனா சிகிச்சைக்கு திறன்பெற்ற ஃபேபிஃப்ளூவை அறிமுகம் செய்திருக்கும் கிளென்மார்க்

கரோனா சிகிச்சைக்கு அதிக திறன்பெற்ற ஃபேபிஃப்ளூ மருந்தை மும்பையை சேர்ந்த  கிளென்மார்க் மருந்து நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.

ஃபேபிபிரவிர் என்ற வைரஸை எதிர்க்கும் சக்தி கொண்ட 200 மில்லி கிராம் மாத்திரைகளை  அறிமுகப்படுத்திய கிளென்மார்க் நிறுவனம் தற்போது அதிக திறன்பெற்ற 400 மில்லி கிராம் மாத்திரைகளை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டில் கரோனா பாதித்து லேசானது முதல் மிதமான பாதிப்புக் கொண்ட நோயாளிகளுக்கு வாய்வழியாக அளிக்கும் இந்த மாத்திரை பரிந்துரை செய்யப்படுகிறது.

மும்பையைச் சேர்ந்த கிளென்மார்க் பார்மாக்யூடிகல் மருந்து நிறுவனத்தின் ஃபேவிபிரவிர் (FAVIPIRAVIR) மருந்துக்கு மத்திய அரசு ஜூன் மாதம் அனுமதி வழங்கியது. FabiFlu என்ற பிராண்ட் பெயரில் விற்பனைக்கு வந்த மருந்தை கரோனா பாதித்து லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க பரிந்துரைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 

இதுவரை இந்த மாத்திரைகள் 200 மில்லி கிராம் அளவிலேயே வந்தன. இதனை கரோனா நோயாளிகளுக்கு முதல் நாளில் இரண்டு வேளைக்கு தலா 1,800 மில்லி கிராம் வழங்கவும், அடுத்த நாளில் இரண்டு முறை 800 மில்லி கிராம் என்ற விகிதத்தில் அடுத்த 13 நாள்களுக்கு வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டது. அந்த வகையில், ஒரு நோயாளி முதல் நாளில் 18 மாத்திரைகளையும், அடுத்த 13 நாள்களுக்கு தினம் ஒன்றுக்கு 8 மாத்திரைகளையும் சாப்பிட வேண்டும்.

இதனால், ஒரு கரோனா நோயாளிக்கு இந்த மருந்துக்கு ஆகும் செலவு ரூ.12,500 ஆக இருந்தது.

தற்போது இதே மாத்திரை 400 மில்லி கிராமில் விற்பனைக்கு வரும் பட்சத்தில் உட்கொள்ளும் மாத்திரையின் அளவு குறைகிறது. அதே சமயம், அதன் விலை குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.


இந்த மாத்திரை விற்பனைக்கு வந்த போது மருந்தின் விலை ஒரு மாத்திரை ரூ.103 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அப்போது மருந்துச் சந்தையில், இந்த மருந்து 34 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டை அதிகபட்ச சில்லறை விற்பனை விலையாக ரூ.3,500க்கு விற்பனைக்கு வந்தது. பிறகு, இந்த மாத்திரையின் விலை 27% குறைக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு மாத்திரையின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூ.75 ஆகக் குறைந்தது.

இந்தியாவில், ஃபேபிஃப்ளூ (FabiFlu) மருந்துதான், முதல் முறையாக கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க வாய் வழியாக அளிக்க பரிந்துரை செய்யப்பட்ட முதல் மருந்து, இது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டால் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து என்ற நிலையில் உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com