ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சரும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவருமான மனோஜ் சின்ஹா
மனோஜ் சின்ஹா
மனோஜ் சின்ஹா

புது தில்லி: ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சரும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவருமான மனோஜ் சின்ஹா வியாழக்கிழமை நியமிக்கப்பட்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகை பத்திரிகையாளர் செயலாளர் அஜய் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் கிரீஷ்சந்திர முா்மு தனது பதவியை புதன்கிழமை இரவு ராஜிநாமா செய்தாா். அரது ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். 

இதையடுத்து ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சரும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவருமான மனோஜ் சின்ஹாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து மனோஜ் சின்ஹா ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்டார். 

61 வயதான சின்ஹா ஜூலை 1, 1959 அன்று கிழக்கு உ.பி.யின் காசிப்பூர் மாவட்டத்தின் மோகன்புராவில் பிறந்தார், கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் பின்தங்கிய கிராமங்களின் முன்னேற்றத்திற்காக தீவிரமாக பணியாற்றியவர். 

1982 ஆம் ஆண்டில் பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியது.

1989 முதல் 1996 வரை பாஜக தேசிய சபை உறுப்பினராக இருந்து வந்த சின்ஹா, முதல் முறையாக 1996 ஆம் ஆண்டு காசிபூர் தொகுதியில் இருந்து  மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர், கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியை தழுவினார்.

2014 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றபோது ரயில்வே மற்றும் தொழில்நுட்பத் துறையில் இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

இதனிடையே, தனது பதவியை ராஜிநாமா செய்துள்ள கிரீஷ்சந்திர முா்மு மத்திய அரசில் வேறு புதிய பொறுப்பு அளிக்கப்பட இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com