கரோனா தொற்றை விடவும் அச்சமூட்டும் மற்றொரு விஷயம்

கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதனால் ஏற்படும் பிரச்னைகளும் அவமானங்களுமே மக்களுக்கு கரோனாவை விடவும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக கர்நாடக நுரையீரல் மருத்துவர்கள் சங்கத் தலைவர் மருத்து
கரோனா தொற்றை விடவும் அச்சமூட்டும் மற்றொரு விஷயம்
கரோனா தொற்றை விடவும் அச்சமூட்டும் மற்றொரு விஷயம்


கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதனால் ஏற்படும் பிரச்னைகளும் அவமானங்களுமே மக்களுக்கு கரோனாவை விடவும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக கர்நாடக நுரையீரல் மருத்துவர்கள் சங்கத் தலைவர் மருத்துவர் கே.எஸ். சதீஷ் கூறுகிறார்.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுவிட்டால், அதன் பிறகு அவர்கள் சந்திக்கும் மருத்துவ நடைமுறைகள், சமுதாயத்தில் அண்டை வீட்டாரால் நாம் நடத்தப்படும் விதம் போன்றவையே, ஒருவர் கரோனா பரிசோதனை செய்து கொள்வதில் இருந்து தடுப்பதாகக் கூறியுள்ளார்.

ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுவிட்டால், அவர்களது வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டு, சாலையே மூடப்பட்டுவிடுகிறது. வீட்டின் வாசலில் அபாய எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்படுகிறது.  இந்த நடைமுறை உலகின் எந்த மூளையிலும் இல்லை என்கிறார் மருத்துவர் சதீஷ்.

அதே சமயம், மக்களும் சமூகப் பொறுப்போடு, அறிகுறிகள் தெரிய வந்தால் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், இந்தியாவில் குணமடைவோர் விகிதம் அதிகமாகவே உள்ளது. இது உயிர்கொல்லி வைரஸ் அல்ல என்றும் கூறுகிறார்.

பெங்களூருவில் ராஜாஜி நகர் - மகாலஷ்மி பகுதியில் வசித்து வரும் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத நபர் ஒருவர் இது பற்றி கூறுகையில், தாய், தந்தைக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதும் வீட்டுக்கு சீல் வைத்துவிட்டார்கள், அவர்களை மருத்துவமனைக்குச் சென்று பார்க்கக் கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டேன். ஒரு சாலையை மூடுவதால் கரோனாவை எவ்வாறு தடுக்க முடியும் என்று நிர்வாகம் நினைக்கிறது என்று புரியவில்லை என்று வேதனையோடு கூறுகிறார்.

ஒருவர் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படும் நோயாக இருக்கும் எச்ஐவி பரிசோதனை செய்து கொள்ளும் போது கூட இந்த அளவுக்கு அச்சப்படுவதில்லை, ஆனால், ஒருவர் கரோனா பரிசோதனைக்கு வரும் போது அவ்வளவு அச்சுறுத்தல்கள் இருக்கின்றன என்கிறார் நோய் எதிர்ப்பு சக்தி நிபுணர் மருத்துவர் டாக்டர் சந்திரசேகர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com