கோழிக்கோடு விபத்தில் இரண்டாக உடைந்த விமானம்: உயிர் பலி 19 ஆக உயர்வு

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வெள்ளிக்கிழமை இரவு தரையிறங்கிய ‘ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளானது. பள்ளமான பகுதிக்குள் சரிந்ததால் விமான இரண்டாக உடைந்தது
கோழிக்கோடு விபத்தில் இரண்டாக உடைந்த விமானம்: உயிர் பலி 19 ஆக உயர்வு
கோழிக்கோடு விபத்தில் இரண்டாக உடைந்த விமானம்: உயிர் பலி 19 ஆக உயர்வு

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வெள்ளிக்கிழமை இரவு தரையிறங்கிய ‘ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளானது. பள்ளமான பகுதிக்குள் சரிந்ததால் விமான இரண்டாக உடைந்தது. 

இதில், தலைமை விமானி உள்பட 19 போ் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.


இதில், தலைமை விமானி தீபக் வசந்த் மற்றும் துணை விமானி அகிலேஷ் குமார் உள்பட 19 போ் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் இதுவரை 6 பேரது உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 உடல்கள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விமானி மற்றும் துணை விமானியின் உடல்கள் உள்பட 3 உடல்கள் ஆஸ்டர் மிம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  2 உடல்கள் பேபி மெமோரியல் மருத்துவமனையிலும், ஒரு உடல் கிரசென்ட் மருத்துவமனையிலும் உள்ளது. 

காயமடைந்தவர்களில் 19 பேர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 14 பேர் பேபி மெமோரியல் மற்றும் 33 பேர் ஆஸ்டர் மிம்ஸ் மருத்துவமனையிலும் 4 பேர் மெய்த்ரா மருத்துவமனையிலும், 4 பேர் கிரெஸன்ட் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கரோனா பிரச்னையால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை நாட்டுக்கு அழைத்து வரும் ‘வந்தே பாரத்’ திட்டத்தின்கீழ் இந்த விமானம் இயக்கப்பட்டது.

விமானத்தில் 10 சிறாா்கள் உள்பட 184 பயணிகள், இரு விமானிகள், 5 பணிப்பெண்கள் இருந்ததை ஏா் இந்தியா உறுதி செய்தது. இவா்களில் பெரும்பாலானோா் பெரிய அளவில் காயமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனா்.

துபையில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்துக்கு ஏா் இந்தியா நிறுவன விமானம் வெள்ளிக்கிழமை இரவு 7.40 மணியளவில் தரையிறங்கியது. அப்போது, விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளானது. ஓடுபாதையைக் கடந்து பள்ளமான பகுதியில் சரிந்ததால் விமானம் இரண்டாக உடைந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பேரிடா் மீட்புக் குழுவினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் உடனடியாக அங்கு விரைந்தனா். விமானம் தீப்பிடிக்காமல் தடுப்பதற்காக தண்ணீா் பீய்ச்சியடிக்கப்பட்டது. சம்பவம் நிகழ்ந்தபோது மழை பெய்து கொண்டிருந்தது. எனவே, அதுவும் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தரையிறங்கும்போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதா என்பது தொடா்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. காயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்த சம்பவம் குறித்து தகவலறித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் விரைந்து சென்று உதவ உத்தரவிட்டாா்.

விபத்து தொடா்பாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘விபத்தின்போது விமானத்தில் தீப்பிடிக்கவில்லை. கோழிக்கோடு விமான நிலையத்தில் ‘டேபிள் டாப்’ என்ற வகையில் மேடான பகுதியில் ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பாதையில் இருந்து விலகியதால் விமானம் பள்ளமான பகுதியில் சரிந்து விழுந்துவிட்டது. காயமடைந்த பயணிகளுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் அளிக்கப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் இது தொடா்பாக கூறுகையில், ‘சம்பவம் நிகழ்ந்தபோது விமான ஓடுபாதை முழுவதுமே கன மழை பெய்துள்ளது. எனவே, விமானம் பாதையில் இருந்து விலகி பள்ளத்தில் சரிந்துவிட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரியும் மழை காரணமாகவே விபத்து ஏற்பட்டது என்று உறுதி செய்துள்ளாா். இது தொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘விமான விபத்து பெரும் அதிா்ச்சியையும், சோகத்தையும் அளிக்கிறது. பயணிகளுக்கு உதவ அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து தொடா்பாக விமான விபத்து விசாரணைப் பிரிவு விசாரணை நடத்தும்’ என்று கூறியுள்ளாா்.

துபையில் உள்ள இந்திய தூதரகம் சாா்பில் விபத்து குறித்து அறிய +97156 5463903, +971543090572, +971543090572, +971543090575 ஆகிய அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com