திருப்பதியில் 743 ஊழியர்களுக்கு கரோனா; 3 பேர் பலி: கோயில் நிர்வாகம்

கரோனா தொற்றுப் பரவல் காரணமக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் தளர்த்தப்பட்டு, கோயில் திறக்கப்பட்டது முதல், திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 743 பேருக்கு இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக க
திருப்பதியில் 743 ஊழியர்களுக்கு கரோனா; 3 பேர் பலி: கோயில் நிர்வாகம்
திருப்பதியில் 743 ஊழியர்களுக்கு கரோனா; 3 பேர் பலி: கோயில் நிர்வாகம்


திருப்பதி: கரோனா தொற்றுப் பரவல் காரணமக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் தளர்த்தப்பட்டு, கோயில் திறக்கப்பட்டது முதல், திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 743 பேருக்கு இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான செயற்குழு அதிகாரி அனில் குமார் சிங் இது பற்றிக் கூறுகையில், ஜூன் 11-ம் தேதி ஸ்ரீவாரி கோயில், சுவாமி தரிசனத்துக்காக திறக்கப்பட்டது முதல் இதுவரை 743 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 402 பேர் கரோனாவில் இருந்து மீண்டு பணிக்குத் திரும்பிவிட்டனர். மற்ற 338 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுவரை கரோனா பாதித்து 3 ஊழியர்கள் பலியாகியுள்ளனர். கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் ஊழியர்களுக்கு சிறந்த சிகிச்சை கிடைக்க தேவஸ்தானம் வழிவகை செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொண்டு, மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியே கோயில் ஜூன் 11-ம் தேதி திறக்கப்பட்டது. அப்போது அந்த முடிவை பலரும் வரவேற்றனர். ஆனால், தற்போது ஊழியர்களுக்கு கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் பலரும், கோயில் வருவாயைப் பெருக்கவே, தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டுகிறார்கள். பக்தர்கள் மூலம் கிடைக்கும் பணத்தை விட, கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு கோயில் நிர்வாகம் கூடுதலாக பணத்தை செலவிடுகிறது.  தரிசனம் செய்ய வரும் பக்தர்களும் கோயில் நிர்வாகம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் முழு திருப்தி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி கோயிலில் மட்டும் கரோனா தொற்று அதிகரிக்கவில்லை, ஒட்டுமொத்த மாநிலம், நாட்டிலும் கரோனா தொற்று பரவி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com