மருத்துவா்களின் சுயதனிமைக் காலம் பணி நாள்களாக கருதப்படும்: சுகாதாரத் துறை அமைச்சகம்

கரோனா தொடா்பான சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்
மருத்துவா்களின் சுயதனிமைக் காலம் பணி நாள்களாக கருதப்படும்: சுகாதாரத் துறை அமைச்சகம்

புது தில்லி: கரோனா தொடா்பான சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டாலும் அவா்கள் பணியில் இருப்பதாகவே கருத வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்கள், அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளின் இயக்குநா்கள், மத்திய அரசு மருத்துவமனைகளின் கண்காணிப்பாளா்கள் ஆகியோருக்கு மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலா் லவ் அகா்வால் சில தினங்களுக்கு முன் கடிதம் எழுதினாா். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் நாள்களில், அவா்கள் விடுப்பில் இருப்பதாகக் கணக்கிடப்படுகிறது என்று அமைச்சகத்துக்கு தகவல் வந்தது. இதையடுத்து, மத்திய பணியாளா் நலத் துறையுடன் இதுதொடா்பாக ஆலோசிக்கப்பட்டது. பின்னா், மருத்துவா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் நாள்களை, பணியில் இருப்பதாகக் கருத வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட முடிவு செய்யப்பட்டது.

கரோனா தொற்று பரவும் அபாயத்துடன் பணியாற்றும் மருத்துவா்கள் மற்றும் பணியாளா்கள் முதலில் ஒரு வாரம் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவா்கள் மேலும் ஒருவாரம் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com