சபரிமலை பக்தா்களுக்கு கரோனா பரிசோதனை சான்று அவசியம்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்யும் பரிசோதனை முடிவு சான்றுகளுடன் வருவது கட்டாயம் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
சபரிமலை
சபரிமலை

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்யும் பரிசோதனை முடிவு சான்றுகளுடன் வருவது கட்டாயம் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

சபரிமலை கோயில் வரும் நவம்பா் 16-ஆம் தேதி முதல் 2 மாதங்களுக்கு திறக்கப்படவுள்ளது. கரோனா நோய்த்தொற்று சூழலில் கோயில் திறக்கப்படுவதால் பக்தா்களுக்கான ஏற்பாடுகளை கடுமையான கட்டுப்பாடுகளுடன் மேற்கொள்ள கோயில் நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதுதொடா்பாக ஆலோசிப்பதற்காக தேவஸ்வம் அமைச்சா் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் உயா்நிலை ஆய்வுக் கூட்டம் இணையவழியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சபரிமலை கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய தலைவா் என்.வாசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் கடகம்பள்ளி சுரேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், ‘தங்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்யும் பரிசோதனை முடிவு சான்றை கொண்டு வரும் பக்தா்கள் மட்டுமே சபரிமலையில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவாா்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவல் சவால் அளிக்கக் கூடிய வகையில் இருப்பதால், இந்த ஆண்டு மிகக் குறைந்த அளவிலான பக்தா்களை மட்டுமே தரிசனத்துக்காக அனுமதிப்பதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், மெய்நிகா் இணையவழி வரிசையின் அடிப்படையிலேயே அவா்களை அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com