சுயசார்பு என்பதே ஒவ்வொரு இந்தியரின் தராக மந்திரம்: பிரதமர் மோடி

சுயசார்பு என்பதே ஒவ்வொரு இந்தியரின் தராக மந்திரமாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 
சுயசார்பு என்பதே ஒவ்வொரு இந்தியரின் தராக மந்திரம்: பிரதமர் மோடி


புதுதில்லி: சுயசார்பு என்பதே ஒவ்வொரு இந்தியரின் தராக மந்திரமாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 

நாட்டின் 74வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி நாட்டு ஏழாவது ஆண்டாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 

இந்தியர்கள் தியாகத்திற்கு அஞ்சியதில்லை: அவரது உரையின்போது, நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார். ஒரே நாடு என்ற ஒற்றுமையுடன் நாம் சாவல்களை வெலே்வோம். இந்தியர்கள் ஒருபோதும் தியாகத்திற்கு அஞ்சியதில்லை. 

சொந்தக் காலில் நிற்கும்படி பிள்ளைகளுக்கு பெற்றோர் அறிவுரை கூறுவதுண்டு. இன்று நாம் சுயசார்புடன் சொந்தக் காலில் நிற்கும் வலிமை பெற்றுள்ளோம். 

உலகம் இந்தியாவிடம் நிறைய எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது. தனது ஆன்ம பலத்தால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. 

உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் இந்தியா மீது நம்பிக்கை வைத்துள்ளன. நமது சீர்த்திருத்தங்களால் பல நாடுகள் நம் மீது நம்பிக்கையை அதிகரித்துள்ளன. 

புதிய கல்விக் கொள்கைக்கு வரவேற்பு: புதிய கல்விக் கொள்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்திய குடிமக்களை உலக குடிமக்களாக மாற்றுவதே நமது இலக்கு. இந்திய வேர்களுடன் நமது மாணவர்கள் உலக குடிமக்களாக மாறுவார்கள். 

நடுத்தர மக்கள் நமது மிகப்பெரிய பலம்: நடுத்தர வர்க்க மக்கள் நமது மிகப்பெரிய பலமாக உள்ளனர். இந்தியா நடுத்தர வர்க்க மக்களின் நலன்கள் மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நடுத்தர வர்க்க மக்களுக்காக புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். நடுத்தர வர்க்க மக்களின் கனவே நிறைவேற்ற ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. 

விவசாயிகளுக்கு அதிகாரம்: விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். விவசாயிகளின் செலவுகளை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகளின் உற்பத்திகளை பன்னாட்டு சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும். 

கரோனா காவத்தில் நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவசமாக உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது. 

முப்படைகளிலும் பெண்கள்: நாட்டின் எந்தவொரு பகுதியும் பின்தங்கிவிடக் கூடாது. முப்படைகளிலும் நிரந்தரமாக பணியாற்றும் வாய்ப்பு பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜன்தன் திட்டத்தின் கீழ் 22 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம் விரைவில் தொடங்கப்படும். 

கரோனா தடுப்பு மருந்து: கரோனா தடுப்பு மருந்து விரைவில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வோம். தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் நிபுணர்கள் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். மூன்று தடுப்பு மருத்து பரிசோதனைகள் இறுதி கட்டத்தில் உள்ளது. 

காஷ்மீரில் விரைவில் தேர்தல்: காஷ்மீரில் தொகுதிகள் மறுவரை பணிகள் முடிந்தவுடன் விரைவில் அங்கு தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com