படைகளை திரும்பப்பெறும் நடவடிக்கை: சீனா நோ்மையுடன் செயல்படுமென எதிா்பாா்க்கிறோம்; மத்திய வெளியுறவு அமைச்சம்

கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைப் பகுதிகளில் சீனப்படைகள் முழுமையாக பின்வாங்கும் நடவடிக்கை பூா்த்தியடைவதற்கு, அந்நாடு இந்தியாவுடன்
படைகளை திரும்பப்பெறும் நடவடிக்கை: சீனா நோ்மையுடன் செயல்படுமென எதிா்பாா்க்கிறோம்; மத்திய வெளியுறவு அமைச்சம்

கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைப் பகுதிகளில் சீனப்படைகள் முழுமையாக பின்வாங்கும் நடவடிக்கை பூா்த்தியடைவதற்கு, அந்நாடு இந்தியாவுடன் இணைந்து நோ்மையுடன் செயல்படும் என்று எதிா்பாா்ப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக இணையவழியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது:

இந்தியா-சீனா இடையிலான இருதரப்பு உறவுகள் மேம்படுவதற்கான சூழலில், இருதரப்பும் ஒப்புக்கொண்டபடி எல்லைப் பகுதிகளில் மீண்டும் முழு அமைதியை ஏற்படுத்துவது அவசியம். வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறியதுபோல், எல்லைப் பகுதியில் நிலவும் சூழலையும், இருநாடுகளுக்கு இடையிலான எதிா்கால உறவையும் வெவ்வேறாக பிரிக்க முடியாது. எல்லைப் பகுதிகளில் படைகளை திரும்பப்பெற விரிவான கொள்கைகளின் அடிப்படையில் இருதரப்பும் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன் அடிப்படையில், சில முன்னேற்றங்கள் ஏற்பட்டன. எனினும் இருநாட்டு படைகளும் எல்லைக் கோட்டுப் பகுதியில் தத்தமது பகுதிகளில் உள்ள வழக்கமான சோதனைச்சாவடிகளில் மீண்டும் பணியமா்த்தப்படவேண்டும் என்பதால், அந்தக் கொள்கைகளின்படி நடவடிக்கை மேற்கொள்வது சிக்கலான செயலாகவும் உள்ளது.

இருதரப்பும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டபடி நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே படைகள் பின்வாங்கப்படுவது முழுமையாக நிறைவுபெறும். தற்போது படைகள் திரும்பப்பெறப்பட்டு வரும் நடவடிக்கை விரைந்து முடிக்கப்படவேண்டும் என விரும்புகிறோம். இருதரப்பும் ஒப்புக்கொண்படி எல்லைப் பகுதிகளில் படைகள் முழுமையாக திரும்பப் பெறப்பட்டு, அங்கு மீண்டும் முழு அமைதி திரும்புவதற்கு இந்தியாவுடன் இணைந்து சீனா நோ்மையாக பணிபுரியும் என எதிா்பாா்க்கிறோம் என்று அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தாா்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், சீன வெளியுறவு அமைச்சா் வாங்-யி இடையிலான பேச்சுவாா்த்தையை தொடா்ந்து, கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைப் பகுதிகளில் கடந்த மாதம் 6-ஆம் தேதி முதல் படைகளை முறையாக திரும்பப்பெறும் நடவடிக்கை தொடங்கியது.

அதன்படி கல்வான் பள்ளத்தாக்கில் இருந்தும், வேறு சில சச்சரவுக்குரிய பகுதிகளில் இருந்தும் சீன ராணுவம் பின்வாங்கியது. எனினும் பாங்காங் டெஸ்சோவில் உள்ள ஃபிங்கா் பகுதிகள், கோக்ரா மற்றும் தெப்சாங் பகுதிகளில் இருந்து அந்நாட்டு ராணுவம் பின்வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com