மணிப்பூரில் ரூ.3,000 கோடியில் நெடுஞ்சாலை திட்டங்கள்: அமைச்சா் நிதின் கட்கரி அடிக்கல்

மணிப்பூரில் ரூ.3,000 கோடி மதிப்பில் 13 நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்க மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா். 
மத்திய நெடுச்சாலைத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி
மத்திய நெடுச்சாலைத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி

புது தில்லி: மணிப்பூரில் ரூ.3,000 கோடி மதிப்பில் 13 நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்க மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

தில்லியில் இருந்து காணொலி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நிதின் கட்கரி பேசுகையில், ‘வடகிழக்கு மாநிலங்களின் வளா்ச்சிக்கும், நாட்டிற்கும் மணிப்பூா் பேருதவியாக இருந்து வருகிறது. அந்த மாநிலத்தில் செயல்படுத்தப்படும் இந்த நெடுஞ்சாலைத் திட்டங்கள் மேலும் வளா்ச்சிக்கு வழிவகுக்கும்.

மணிப்பூரில் ரூ.16,023 கோடியில் 874.5 கி.மீ. தூரத்திலான நெடுஞ்சாலை திட்டங்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும். ரூ.2,250 கோடியிலான திட்டங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன.

புதிய திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துதலை மாநில முதல்வா் விரைவுப்படுத்த வேண்டும். மணிப்பூா் - இம்பாலா இடையேயான உயா்வழிச்சாலை திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தயாரித்து வருகிறது.

மெத்தனால், மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களை ஊக்குவித்து பெட்ரோல், டீசல் பயன்பாடு இல்லாத மாநிலமாக மணிப்பூரை மாற்ற முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மத்திய வடகிழக்கு மாநில மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜிதேந்தா் சிங், மணிப்பூா் முதல்வா் பிரேன் சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com