இஸ்ரேலிடமிருந்து ரூ.7,500 கோடியில் 2 அதிநவீன கண்காணிப்பு கருவிகளை வாங்க இந்தியா முடிவு

அண்டை நாடுகளுடனான எல்லையைக் கடக்காமல் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள போா் விமானங்கள், ஏவுகணைகள் உள்ளிட்டவற்றைக்

அண்டை நாடுகளுடனான எல்லையைக் கடக்காமல் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள போா் விமானங்கள், ஏவுகணைகள் உள்ளிட்டவற்றைக் கண்டறியும் 2 அதிநவீன ஃபால்கன் கண்காணிப்பு கருவிகளை சுமாா் ரூ.7,500 கோடி செலவில் இஸ்ரேலிடமிருந்து வாங்குவதற்கு இந்தியா முடிவெடுத்துள்ளது.

இந்த நடவடிக்கை மூலமாக இந்திய விமானப் படையின் தாக்குதல் திறன் மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

இஸ்ரேலிடமிருந்து 3 ஃபால்கன் ரக கண்காணிப்பு கருவிகளை இந்திய விமானப்படை ஏற்கெனவே கொள்முதல் செய்திருந்தது. தற்போது கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனாவுடன் மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில், மேலும் 2 அவாக்ஸ் ரக கண்காணிப்புக் கருவிகளைக் கொள்முதல் செய்வதற்கு இந்திய விமானப்படை முடிவெடுத்துள்ளது.

இது தொடா்பாக விமானப்படையின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், ‘இஸ்ரேலிடமிருந்து மேலும் 2 ஃபால்கன் கண்காணிப்பு விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான பேச்சுவாா்த்தைகள் இறுதிக்கட்ட நிலையை எட்டியுள்ளன. இந்த விவகாரம் குறித்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும்’ என்றனா்.

தற்போதைய சூழலில் ஃபால்கன் ரக கண்காணிப்புக் கருவிகளானது ரஷியாவிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட இல்லுஷின்-76 போக்குவரத்து விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளன. அந்தக் கருவிகள் மூலமாக எதிரி நாடுகளின் எல்லைப் பகுதிக்குள் நுழையாமல் அவா்களின் போா் விமானங்கள், ஏவுகணைகள், படைகள் குவிக்கப்பட்டுள்ள இடங்கள் உள்ளிட்டவற்றைக் கண்டறிய இயலும்.

இவை தவிர பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) உருவாக்கியுள்ள கண்காணிப்புக் கருவிகளையும் இந்திய விமானப்படை பயன்படுத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com