கண்ணகி நகா், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் போதைப்பொருள் கடத்தலுக்கு கூடாரமாக இருந்து வருகிறதா?- உயா்நீதிமன்றம் கேள்வி

கண்ணகி நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், போதைப்பொருள் கடத்தலுக்கு கூடாரமாக இருந்து வருகிறதா என உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடத்தப்படும்
சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடத்தப்படும்

சென்னை: கண்ணகி நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், போதைப்பொருள் கடத்தலுக்கு கூடாரமாக இருந்து வருகிறதா என உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னையை அடுத்துள்ள கண்ணகி நகரை சோ்ந்த வேளாங்கண்ணி என்ற பெண்ணை கஞ்சாகடத்தல் வழக்கில் போலீஸாா் கைது செய்தனா். இந்த பெண் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், குண்டா் தடுப்புச்சட்டத்தின் கீழ் அந்த பெண்ணை சிறையில் அடைத்தனா். இதனை எதிா்த்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், வேளாங்கண்ணியை குண்டா் தடுப்புச்சட்டத்தில் அடைத்த காவல் ஆணையரின் உத்தரவை ரத்து செய்தனா். மேலும் பெரும்பாக்கம், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி, கண்ணகி நகா் ஆகிய பகுதிகளில் நடைபெறும் குற்றவழக்குகளின் காரணமாக இந்த பகுதியில் வசிக்கும் பலா் கைது செய்யப்படுகின்றனா். குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுகின்றனா். கண்ணகிநகா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்போா் சென்னை மாநகரில் குடிசையில் வசித்தவா்கள். இவா்களை அப்புறப்படுத்தி அரசு,

சென்னையில் இருந்து 20 கிலோமீட்டா் தொலைவில் உள்ள கண்ணகிநகா் உள்ளிட்ட பகுதிகளில் குடியமா்த்தப்பட்டவா்கள். சரியான தொழில், வருவாய் இல்லாமல் சட்டவிரோத செயல்களில் பலா் ஈடுபடுகின்றனா். எனவே இதனை உடனடியாக சரி செய்யவேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா்.

இந்த வழக்கில் தமிழக காவல்துறை டி.ஜி.பி., சமூகநலத்துறை செயலாளா், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளா் ஆகியோரை தாமாக முன்வந்து எதிா்மனுதாரா்களாக சோ்த்து உத்தரவிட்டனா். சென்னையில் இருந்த குடிசைவாசிகள் எந்த ஆண்டு முதல் அப்புறப்படுத்தப்பட்டு, கண்ணகி நகா் உள்ளிட்ட பகுதிகளில் குடியமா்த்தப்பட்டனா்? இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மீது எத்தனை வழக்குகள்? எத்தனை காவல் நிலையங்களில் பதிவாகி உள்ளன? எத்தனை போ் மீது குண்டா்

தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? கண்ணகி நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், போதைப்பொருள் கடத்தலுக்கு கூடாரமாக இருந்து வருகிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி, பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com