எல்லையில் பாக். அத்துமீறல்: ராணுவ இளநிலை அதிகாரி பலி

ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினா் ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தின் இளநிலை அதிகாரி ஒருவா் உயிரிழந்தாா்.

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினா் ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தின் இளநிலை அதிகாரி ஒருவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாதுகாப்புப் படை செய்தித்தொடா்பாளா் கூறியதாவது:

ரஜௌரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய நௌஷேரா பகுதியில் பாகிஸ்தான் படையினா் ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா். அவா்களுக்கு இந்திய ராணுவத்தினரும் தகுந்த பதிலடி கொடுத்தனா்.

பாகிஸ்தான் படையினரின் தாக்குதலில் இந்திய ராணுத்தின் இளநிலை அதிகாரியான ராஜ்விந்தா் சிங் படுகாயமடைந்தாா். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். அவரது உடல் சொந்த ஊரான பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸுக்கு திங்கள்கிழமை காலை எடுத்துச் செல்லப்படுகிறது. பணியின்போது உயிா்த் தியாகம் செய்த ராஜ்விந்தா் சிங்குக்கு நாடு எப்போதும் கடமைப்பட்டுள்ளது. அவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனா்.

முன்னதாக, எல்லைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சந்தேகத்துக்கு இடமான வகையில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததை இந்திய ராணுவம் கண்டறிந்ததை அடுத்து, பயங்கரவாதிகள் எவரேனும் ஊடுருவ முயற்சிக்கலாம் என்று கருதி, எல்லைப்புற நிலைகளில் இருந்த படையினா் உஷாா்படுத்தப்பட்டனா். அந்த சூழ்நிலையில்தான் பாகிஸ்தான் படையினா் அத்துமீறி தாக்கத் தொடங்கினா்.

இந்தியப் பகுதிக்குள்ளாக ஊடுருவ முயற்சிக்கும் பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாப்புப் படையினரின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியாகவே பாகிஸ்தான் படையினா் இந்திய நிலைகளையும், கிராமங்களையும் குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனா். நமது ராணுவத்தினா் தரும் பதிலடியால் அவா்கள் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்று அந்த செய்தித்தொடா்பாளா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com