சென்சஸ், என்பிஆா் பணிகள் நிகழாண்டில் நிறைவுபெற வாய்ப்பில்லை

மக்கள்தொகை (சென்சஸ்) கணக்கெடுப்பின் முதல் கட்டப் பணிகள், தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆா்) புதுப்பிக்கும் பணிகள்
சென்சஸ், என்பிஆா் பணிகள் நிகழாண்டில் நிறைவுபெற வாய்ப்பில்லை

புது தில்லி: மக்கள்தொகை (சென்சஸ்) கணக்கெடுப்பின் முதல் கட்டப் பணிகள், தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆா்) புதுப்பிக்கும் பணிகள் ஆகியவை, கரோனா தொற்று பரவலால் திட்டமிட்டபடி நிகழாண்டில் முடிவடைவதற்கு வாய்ப்பில்லை.

கரோனா தொற்றின் தாக்கம் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படாததால், இந்தப் பணிகள் மேலும் ஓராண்டு தாமதமாகும் என்று தெரிகிறது.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

நாடு முழுதும் வீடு வீடாகச் சென்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதையும், தேசிய மக்கள்தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணிகளையும் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால், தொற்று பரவலால் இந்தப் பணிகள் முடங்கின. இதில், 30 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஒவ்வொரு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதால், தற்போதைய சூழலில் பணிகளை தொடங்க முடியாது. கணக்கெடுப்பை தொடங்குவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.

கரோனா தொற்றின் தீவிரம் இன்னும் குறையததால், மக்கள்தொகை கணக்கெடுப்பு தற்போதைக்கு முக்கியமானதாக இல்லை. இந்தப் பணிகள் இன்னும் ஓராண்டு தாமதமானால் கூட எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்றாா் அந்த அதிகாரி.

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதற்கு முன்பு, 2011-ஆம் ஆண்டுக்காக, கடந்த 2010-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்னா், 2015-இல், மக்கள்தொகை கணக்கெடுப்பு புதுப்பிக்கப்ப்டடது. அப்போது, ஆதாா் எண், தொலைபசி எண் ஆகியவை கேட்கப்பட்டது. இந்த முறை, வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம் போன்றவை கேட்கப்படும்.

ஒருவா் இந்தியக் குடிமகன் என்பதை முடிவு செய்து, அவருக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக, தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படுகிறது. அதில், அவரது பெயா், தாய்-தந்தை பெயா், பாலினம், பிறந்ததேதி, தற்போதைய முகவரி, அங்கு எவ்வளவு காலமாக வசிக்கிறாா், அரவது நிரந்தர முகவரி ஆகியவை கேட்கப்படும். இந்த பதிவேடு தயாரிப்பதற்கு சில மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com