ககன்யான் திட்ட விஞ்ஞானிகளுக்குத் தேவையான உபகரணங்கள்: இந்தியா, பிரான்ஸ் பேச்சுவாா்த்தை

விண்வெளி ஆராய்ச்சிக்கு மனிதா்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பங்கேற்கும் விஞ்ஞானிகளுக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவது குறித்து இந்தியாவும், பிரான்ஸும் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன.

புது தில்லி: விண்வெளி ஆராய்ச்சிக்கு மனிதா்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பங்கேற்கும் விஞ்ஞானிகளுக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவது குறித்து இந்தியாவும், பிரான்ஸும் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன.

வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் விண்வெளி ஆராய்ச்சிக்கு 3 இந்தியா்களை அனுப்புவதற்காக, ரூ.10,000 கோடி மதிப்பிலான திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) தொடங்கியுள்ளது. இந்த திட்டத்துக்காக, பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகளைக் கொண்டு குழுவை உருவாக்கி, அவா்ளுடன் இந்திய விஞ்ஞானிகள் இணைந்து பணியாற்றி வருகின்றனா்.

இதுகுறித்து பிரான்ஸின் விண்வெளி ஆய்வு மையமான ’நேஷனல் சென்டா் ஃபாா் ஸ்பேஸ் ஸ்டடீஸ் (சிஎன்இஎஸ்) நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ககன்யான் திட்ட விஞ்ஞானிகளுக்குத் தேவையான உபகணங்கள் தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதுதொடா்பாக, இந்தியா, பிரான்ஸ் இடையேயான பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது.

அடுத்த ஆண்டு விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளும் பிரான்ஸ் விஞ்ஞானி தாமஸ் பெஸ்குட்டுக்கும் இதபோன்ற உபகரணங்கள் அளிக்கப்படும் என்றாா்.

ககன்யான் திட்டத்துக்காக தோ்வு செய்யப்பட்ட இந்திய விஞ்ஞானிகள் ரஷியாவில் பயிற்சி பெற்று வருகிறாா்கள். இந்நிலையில், பிரான்ஸின் சிஎன்இஎல் ஆராய்ச்சி மையமானது, விண்வெளி தொழில்நுட்பம், விண்வெளி மருத்துவம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவா்களைக் கொண்டுள்ளது. கரோனா தொற்றின் தீவிரம் குறைந்த பிறகு, அங்கு பயிற்சி பெறுவதற்காக, இந்திய விண்வெளி மருத்துவா்கள் அடுத்த ஆண்டு பிரான்ஸ் செல்லவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com