ஓணம்: பத்மநாப சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்

கேரளத்தில் ஓணம் பண்டிகையையொட்டி திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
கேரளத்தில் ஓணம் பண்டிகையையொட்டி திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வழிபாடு
கேரளத்தில் ஓணம் பண்டிகையையொட்டி திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வழிபாடு

திருவனந்தபுரம்: கேரளத்தில் ஓணம் பண்டிகையையொட்டி திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

கேரளத்தில் சிங்கம் மாத பிறப்பையொட்டி இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளத்திலும், தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் உள்ள கேரள மக்கள் அத்தப்பூ கோலமிட்டு, வாழைமரங்களை கட்டி வீடுகளை அலங்கரித்து ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே ஓணம் பண்டிகையையொட்டி ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் கோயில்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஓணம் பண்டிகையையொட்டி திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

கோயில்களில் கிருமிநாசினி வழங்குவது, முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com