பிரணாப் முகர்ஜி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

​முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டிருப்பதாவது:

"2014-இல் நான் தில்லிக்குப் புதிது. முதல் நாளிலிருந்தே பிரணாப் முகர்ஜியின் வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் ஆசிர்வாதங்கள் கிடைக்க நான் ஆசி பெற்றேன். அவருடனான உரையாடல்கள் என்றும் என் நினைவில் இருக்கும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், நாடு முழுவதிலும் உள்ள அவரது ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியாவின் குடியரசுத் தலைவராக, குடியரசுத் தலைவர் மாளிகையை சாதாரண குடிமக்கள் அணுகுவதை மேலும் எளிதாக்கினார். குடியரசுத் தலைவர் இல்லத்தை கற்றல், புதுமை, கலாசாரம், அறிவியல் மற்றும் இலக்கியத்தின் மையமாக மாற்றினார். முக்கியக் கொள்கை விஷயங்களில் அவரது அறிவார்ந்த அனுபவமிக்க ஆலோசனைகளை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

நாட்டின் வளர்ச்சிப் பாதையில் அவர் அழியாத் தடத்தை விட்டுச் சென்றுள்ளார். அறிஞரும், உயர்ந்த அரசியல் தலைவருமான பிரணாப் முகர்ஜி அரசியலுக்கு அப்பாற்பட்டும், சமுதாயத்திலும் அனைத்துப் பிரிவுகளாலும் போற்றப்பட்டார்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com